இப்ராஹிம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இப்ராஹிம்
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  24-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Oct-2014
பார்த்தவர்கள்:  1132
புள்ளி:  111

என்னைப் பற்றி...

என்னைப் பற்றி சொல்ல விருப்பமில்லாமல் இல்லை ஆனால் என்னைப் பற்றி சொல்லவதற்கு எதுவும் இருப்பதில்லை.
என் தொடர்பு என் : 9952643867
மின் அஞ்சல் : ibrahimsaif28@gmail.com

என் படைப்புகள்
இப்ராஹிம் செய்திகள்
இப்ராஹிம் - இப்ராஹிம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Jan-2020 1:11 pm

நிராசை .......,


நாம் ஒவ்வொருவரும் ஏதோ வகையில் யாரோ ஒருவரிடம் நம் மனதை பறிகொடுத்து விடுகிறோம்.காலத்தின் சூட்சிகளில் சிக்கி நம்மில் அநேகரின் ஆசைகள் தொலைந்து போகின்றன. அந்த ஆசைகள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்கொள்கின்றன . தூக்கங்களுக்கான  இரவுகள் விழிப்புகளுடன் முடிந்து போகின்றன. ஆசைகளால் செறிவூட்டப்பட்ட கனவுகள் நம்மை விடாது தொல்லை செய்யும் அந்த இரவுகளின் வலி ........., தலை சாய்க்க வேண்டிய தலையணைகள் கண்ணீரின் அகதிகளின் முகாமாகிப்போகின்றது. திறந்திருக்கும் ஜன்னல் கதவுகளின் வழி , நம்மின் ஆசுவாச நொடிகள் வந்து போகின்றன. நினைவு நீரிச்சுழிகளில் சிக்கி மீள இயலாமல் தவிக்கிறோம் . நம்மின் ஆசைகள் ஒரு நொடிப்பொழுதேனும் நிறைவேறி விடாத என்ற ஏக்க பெருமூச்சு ......., கற்பனைகளில் இருந்து தப்பி யதார்த்தத்திற்கு திரும்பும்போது நம்மில் நிராசைகளே எஞ்சி நிற்கின்றன.......,


நிராசைகளோடு எஞ்சிநிற்கும்,
உங்களில் ஒருவன் . 

மேலும்

இப்ராஹிம் - எண்ணம் (public)
01-Jan-2020 1:11 pm

நிராசை .......,


நாம் ஒவ்வொருவரும் ஏதோ வகையில் யாரோ ஒருவரிடம் நம் மனதை பறிகொடுத்து விடுகிறோம்.காலத்தின் சூட்சிகளில் சிக்கி நம்மில் அநேகரின் ஆசைகள் தொலைந்து போகின்றன. அந்த ஆசைகள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்கொள்கின்றன . தூக்கங்களுக்கான  இரவுகள் விழிப்புகளுடன் முடிந்து போகின்றன. ஆசைகளால் செறிவூட்டப்பட்ட கனவுகள் நம்மை விடாது தொல்லை செய்யும் அந்த இரவுகளின் வலி ........., தலை சாய்க்க வேண்டிய தலையணைகள் கண்ணீரின் அகதிகளின் முகாமாகிப்போகின்றது. திறந்திருக்கும் ஜன்னல் கதவுகளின் வழி , நம்மின் ஆசுவாச நொடிகள் வந்து போகின்றன. நினைவு நீரிச்சுழிகளில் சிக்கி மீள இயலாமல் தவிக்கிறோம் . நம்மின் ஆசைகள் ஒரு நொடிப்பொழுதேனும் நிறைவேறி விடாத என்ற ஏக்க பெருமூச்சு ......., கற்பனைகளில் இருந்து தப்பி யதார்த்தத்திற்கு திரும்பும்போது நம்மில் நிராசைகளே எஞ்சி நிற்கின்றன.......,


நிராசைகளோடு எஞ்சிநிற்கும்,
உங்களில் ஒருவன் . 

மேலும்

இப்ராஹிம் - ப தவச்செல்வன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2019 12:34 am

நாம் ஏமாறுவதற்கு உண்மையான காரணம்?

மேலும்

எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை ! 09-Jan-2020 12:32 am
நம் மனம் எப்பொழுதெல்லாம் நம்மை முட்டாளாக்குமோ அப்பொழுதெல்லாம் 27-Dec-2019 12:54 pm
நாம் எதையும் சிந்திக்காமல் செயல் படுவதால் ஏமாறுகிறோம் ..ஒரு நிமிடம் ஒதுக்கி சிந்தனை செய்து முடிவு எடுத்தால் நாம் நிச்சயம் ஏமாற்றப்படமாட்டோம் என்பது எனது கருத்து... 08-Nov-2019 10:38 am
நாம் ஏமாறுவதற்கு காரணம்.. "நம்பிக்கையை " நாம் ஏன் எதற்கு என்று தெரியாமல் பலர் மீது நம்பிக்கை வைத்து விடுகின்றோம்.. அதன் காரணமாக நமக்கு சில எதிர்பார்ப்புகள் உண்டாகின்றது அங்கிருந்து தொடங்குகின்றது நம் ஏமாற்றம்... "இது நமக்குத்தான் என்று நீ நம்பும் பட்சத்தில் இருந்து தொடங்குகிறது உனது ஏமாற்றம்" 06-Nov-2019 12:58 pm
இப்ராஹிம் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2019 2:31 pm

உன் ஒரு
குறுஞ் செய்திக்காக
நான் தொலைத்த இரவுகள்
எவ்வளவு அழகானவை......,

அந்த இரவுகளை
விடவும் நீண்டிருந்தது
நான் உன் மீது கொண்டிருந்த பிரியம் .......,

உன்னை காணும்
ஒரு நொடிக்காய்
நான் கடந்து வந்த தூரங்கள்
எவ்வளவு அழகானவை.......,

கடந்து வந்த
அந்த பாதைகளை விடவும்
நீண்டிருந்தது அந்த பிரியம் ......,

நீ என்னோடு
பேசும் அந்த ஒரு
வார்த்தைக்காய்
நான் மௌனம் உடைக்காமல்
காத்திருந்த நேரங்கள்
எவ்வளவு அழகானவை .......,

மௌனங்களில் உயிர் எறிந்த
அந்த நொடிகள் .........,

எனக்காய்
ஒரு முத்தம்
ஒரு சிறு ஸ்பரிசம்
ஒரு வருடல்
என
நீ எதுவும்
தந்து விட வில்லை .....

மேலும்

இப்ராஹிம் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2019 12:46 pm

உன்னை
தொட்டு
தொட்டு
காதலிப்பேன்......,

நான் வேண்டுவதெல்லாம்
உன்னின்
தூவல்
மட்டும்......,

அழகிய மழையை

மேலும்

இப்ராஹிம் - எண்ணம் (public)
02-Aug-2019 9:47 am

என் உள்ளத்தில் ஒரு நெருடல்.......,

நான் முன்னதாக வேலை செய்த அலுவலகத்தில் ஒரு தோழி ........,
தைரியமானவள் .........,
எதயும் விளையாட்டாக எடுத்துக்கொள்பவள்.......,
குறும்பானவள் ......,

ஏனோ அவள் மீதி எனக்கொரு சின்னதாய் ஒரு பிரியம் .......,
ஆனால் அவள் வேறு வொருவரை நேசிக்கிறாள்......,

இதனால் என்உள்ளதைஅவளிடம்  சொல்ல என் மனம் தயங்குகிறது .....,

இருந்தும் அவளை எனக்கு பிடிக்கும்.....,

இந்நிலையில் நான் என்ன செய்வது ........? 

மேலும்

இப்ராஹிம் - இப்ராஹிம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2019 4:25 pm

எனக்கான இரவுகள்
எனக்கான தூக்கங்களை தருவதில்லை........,
கசங்கிய படுக்கையின் விரிப்புகளில்
தூக்கங்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன ........,

எனக்கான ஜன்னல்கள்
எனக்கான சுவாசங்களை தருவதில்லை........,
காற்றற்ற நொடிகளோடு
என் நுரையீரல்கள் நொடிந்து போகின்றன.......,

என்னறையில் தவறி விழும்
நிலவின் வெளிச்சம் கூட
எனக்காக சில சந்தோஷங்களை
விட்டுச்செல்வதில்லை........,

புறந்தள்ளி விழும் மழைத்துளிகள் கூட
ஈரத்தை மட்டும் விட்டுச்செல்கின்றன .........,

திறந்து வைத்த என்னறை கதவுகளின் வழி நுழையக் கண்டதில்லை யாரையும்

மேலும்

இப்ராஹிம் - இப்ராஹிம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2019 6:32 pm

கல் தடுக்கியபோது......,

நானறியாமல் கதவின் நிலையில்
தலையில் இடித்துக்கொண்டபோது....,

முட்டாள் காகம் சட்டையில் எச்சம் செய்தபோது.....,

இடரி சாலையில் விழுந்தபோது.....,

பகட்டான கூட்டதில் துண்டாய் நிற்கும் போது....,

எனக்காய் யாரும் அழுவதாய்
தோன்றவில்லை....,

இருந்தும் யாரோ அழுகிரார்கள்....,

பசியால் கிழிந்திரும் வயிற்றின்
ஏதோ ஒரு சதையிலிருந்து

மேலும்

இப்ராஹிம் - இப்ராஹிம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2019 12:39 pm

சற்றே திறந்திருந்த
ஜன்னலின் பிளவுகள் வழி

எஞ்சி இருந்த இரவின்
துண்டுகள்
இடறி விழுந்து கொண்டிருந்தது

ஒரு புகைப்படம்
அந்த
இரவின் ஏனைய துண்டங்களை
விழுங்கி முடித்திருந்தது .......,

அது
பசுமையான நினைவுகளின்
ரேகைகளை சுமந்திருந்தது .......,

அதை விரல்கள்
தீண்டும்போதெல்லாம்
ஏனோ நகக்கணுக்களில்
சில வேதிய மாற்றங்கள்

கனத்த வலிகளின்
ரணங்கள் அதில் புதைக்கப்பட்டன

ஏனோ
அதன் நிழல்களின் ஆழத்தில்

மேலும்

அருமையான கவிதை வரிகள்!!! 14-Jul-2019 9:53 pm
இப்ராஹிம் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2017 5:04 pm

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 20"


இதயம் ஆயிரம் நினைவுகள் கனவுகளை சேமிக்கும் உயிரோட்டமான அகராதி அந்த இதயத்தை பற்றி 
குறுங்கவிதை எழுதுங்கள்... 

மேலும்

மனம் மலர்ந்த அன்பின் நன்றிகள் நண்பா... 17-May-2017 11:48 am
ஆஹா..இதயத்தின் உணர்வுகளை இதயத்திற்கு கவியாக்கி கொடுத்து விட்டிர் இதயம் விஜய் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2017 9:13 pm
மிகவும் அழகான வரிகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2017 9:11 pm
நான் வாங்கும் ஒவ்வொரு சுவாசத்திற்கும் காரணம் நீ ......, என் புன்னகைக்கு பின்னால்...., துடைத்திட யாருமில்லாத அழுகைகளின் அழுகைக்குப் பின்னால்..........., நீ ., என் நிம்மதியான இரவுகளிலும் உறக்கங்களற்று நீ......, என் ஒவ்வொரு விடியல்களின் விழிப்புகளிலும் நீ......., யாருமற்ற என் அறையில் அநேகமான தனிமைகளில் என்னுடன் நீ.........., யாருமறியாத தியாகங்களில் என்னுடன் நீ.............., 06-May-2017 7:39 pm
கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) kanagarathinam மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Apr-2017 5:09 pm

வளைத்து எழுது -----புதுக் கவிதையில் எழுதவும்

வளைந்து கொடுத்துநீ வாழ் ----என்ற ஈற்றடி அமைய வெண்பா எழுதவும் புதுக் கவிதையிலும் எழுதலாம் .

----கவின் சாரலன்

மேலும்

அய்யா வணக்கம்.. தங்களுடைய ஈற்றடி.. கிரியைக் குவாரியாக் காமல் குடையாய் சிறுவிரலில் சேர்த்தவன்; மாதரோ,மது ராவோ மதுக்கடை யின்றியே ஆண்டவன் யாராம்? மதனகோபா லாநீதா னா ? வண்ணவண்ண சேலை வனிதைக் களித்தும் வண்ணங்கள் மாசாகி வண்டலில் வீழாது நதியமுனை காத்தவன்; வல்லவன்தான் யாராம்? மதனகோபா லாநீதா னா ? அன்புடன், அருணை ஜெயசீலி. 15-May-2017 12:00 pm
பெண்ணின் இடையோடு வளைந்து விளையாடிய உன் எழுத்துக்கள் போதும்....., பெண்ணியம் நிமிர நீ வளைத்து எழுது......., ---வளைத்து எழுதுவிற்கு அழகு சேர்க்கும் விழிப்புணர்வு கவிதை . வாழ்த்துக்கள் கவிப்பிரிய ஸை ஃ ப் உல் ஹத்திம் . அன்புடன், கவின் சாரலன் 06-May-2017 10:19 pm
சிறப்பான நேரிசை வெண்பா . அருமை தொடர்ந்து வெண்பா பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள் மதனகோபா லாநீதா னா என்பதை ஈற்றடியாய்க் கொண்டு கண்ணன் மீது ஒரு சிந்தியலோ அல்லது அளவடி வெண்பாவோ நேரிசை அல்லது இன்னிசையில் தாருங்கள் அன்புடன்,கவின் சாரலன் 06-May-2017 10:14 pm
வளைத்து எழுது....., உன் எழுத்துக்களை வளைத்து எழுது....., கூன் கொண்ட மனிதங்கள் நிமிர வேண்டும் ....., வலித்து எழுது....., வெறி கொண்ட அதிகாரங்கள் உன் எழுத்தை வளைத்திடாது வலித்து எழுது......, பெண்ணின் இடையோடு வளைந்து விளையாடிய உன் எழுத்துக்கள் போதும்....., பெண்ணியம் நிமிர நீ வளைத்து எழுது......., உன் மனதின் நெளிவுகள் நீங்க வளைத்து எழுது...., இதை வலித்திடாமல் எழுது.........., 06-May-2017 7:01 pm
இப்ராஹிம் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2016 11:02 am

பைந்தமிழ் இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
---கண்ணதாசன்
இதழும் இதழும் நெருங்கும் போது சுகம் தெரிந்ததா ? --காதலன்
இல்லை சொர்க்கம் தெரிந்தது சொர்க்கம் தெரிந்தது ....காதலி
---இன்னொரு திரைப்பாடல்
அநேகமாக கவிஞர்கள் எல்லோரும் முத்தம் பற்றி எழுதியிருப்போம் .இன்று நானும்
ஒன்று பதிவு செய்திருக்கிறேன் .

கேள்வி இலக்கியம் பற்றியதல்ல ஆரோக்கியம் பற்றியது .

1. இதழும் இதழும் சேர்ந்து எச்சில் பகிரும் பருகும் முத்தம்
ஆரோக்கியமானதா ?

2. மருத்துவ அறிவியல் வளர்ந்த மேலை நாட்டில்தான் தெருவிலும் திரையிலும்
முத்தம் அதிகம் வெகு சகஜம் .
மேலை மருத்துவர்கள் இதை அனுமதிக்கிறார்களா ?

3

மேலும்

ஆஹா அருமையான தகவல் PL . EVERYBODY NOTE !..முத்தத்தின் மருத்துவ குணம் . நெற்றியில் விரலால் அழுத்திக் கொண்டு தலை வலிக்கிறது ....ஆபீஸ் போகனுமா..யோசிக்கிறேன் என்றான் கணவன் . இங்க பக்கத்துல வாங்க என்றாள் மனைவி ...நீங்கள் சொன்ன சிகிச்சையை அளித்தாள் ! தலைவலி பறந்தது ; ஸ்கூட்டரில் விரைந்தான் கணவன் ! உங்கள் ஹக்கீம் இதை சிபாரிசு செய்கிறாரா சைஃப் உல் ஹத்திம் ? அன்புடன்,கவின் சாரலன் 01-Feb-2017 9:54 am
நிச்சயமாக முத்தம் ஆரோக்கியமானது தான் .........., முத்தத்தால் இருவரின் நோய்எதிப்பு சக்தி கூடுவதாய் ஆய்வுகள் காட்டியுள்ளன...., 30-Jan-2017 9:50 pm
ஹா.. ஹா..ஹா.. நைசாக நழுவலாம் என்றால் விடமாட்டீர்கள்.. சரி.. தனித்து பார்த்தால் ஒருவர் எச்சிலை மற்றொருவர் பருகுவது நடவாத விசயம்... ஆனால் அது முத்தத்தோடு வருவதால்.. சத்து இருக்கிறது இரும்பு சத்தல்ல இனிமை சத்து.. அது இன்பத்தின் முத்து இல்லறத்தின் சொத்து..! இது சத்தமில்லா யுத்தம் இருவரிலொருர் எல்லை மீறினால் இதழில் வருமே ரத்தம்..! அப்போது மனதுக்கு இது ஆரோக்கியம்.. எப்போது இதில் பார்கிறார் யோக்கியம்..! நட்புடன் குமரி 08-Sep-2016 10:55 am
முத்தங்கள் அருமை இனிமை வாழ்த்துக்கள் மிக்க நன்றி குமரி உதட்டு முத்தம் ஆரோக்கியமானதா ? அன்புடன்,கவின் சாரலன் வேசியின் முத்தம் விரசம் மழலையின் முத்தம் அமுதம் புத்தகம் கவிஞனின் சொல் முத்தம் ! ---என்று நானும் எழுதியிருக்கிறேன் . 08-Sep-2016 8:38 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை

இவர் பின்தொடர்பவர்கள் (20)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (21)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

Madhushan

Colombo, Srilanka

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே