நிழலின் ஆழங்களில்,
சற்றே திறந்திருந்த
ஜன்னலின் பிளவுகள் வழி
எஞ்சி இருந்த இரவின்
துண்டுகள்
இடறி விழுந்து கொண்டிருந்தது
ஒரு புகைப்படம்
அந்த
இரவின் ஏனைய துண்டங்களை
விழுங்கி முடித்திருந்தது .......,
அது
பசுமையான நினைவுகளின்
ரேகைகளை சுமந்திருந்தது .......,
அதை விரல்கள்
தீண்டும்போதெல்லாம்
ஏனோ நகக்கணுக்களில்
சில வேதிய மாற்றங்கள்
கனத்த வலிகளின்
ரணங்கள் அதில் புதைக்கப்பட்டன
ஏனோ
அதன் நிழல்களின் ஆழத்தில்