புன்னகைப் பூ
நட்டி நாள் பாக்கல......
நல்ல மண்தானோவென சோதிக்கல...........
நீர் தெளிச்சு பதம் பாக்கல......
ஊட்டமொன்னும் கொடுக்கல......
பக்குவம் ஏதொன்னும் செய்யல.....
பராமரிப்பு வேலையொன்னும் நடக்கல..........
ஆனாலும்,
பூக்கிறது புன்னகைப் பூ பார்வை ஒன்றிலே............!
வேல்விழி......