காதல்

தொட்டால் பூ மலரும் பூவையே
உன்னைத் தொட்டால் நீ மலர்வாய்
நானறிவேன் இதழ்கள் மலர்ந்து புன்னகைப்பாய்
தொட்டால் மலரும் பூவோ மலர்ந்த வாடும்
தொட்டவன் கை தரும் சூட்டினால் அதனால்தான்
என்னவளே உன்னைத் தொட்டு சுகம் காண
மனமில்லையடி எனக்கு எங்கு நீ அந்த
மலர்போல் மலர்ந்து அதனால் உன் வண்ணமுகமும்
வாடி விடுமோ என்று எண்ணுகையில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Jul-19, 1:19 pm)
Tanglish : kaadhal
பார்வை : 324

மேலே