யாரோ அழுகிரார்கள்

கல் தடுக்கியபோது......,
நானறியாமல் கதவின் நிலையில்
தலையில் இடித்துக்கொண்டபோது....,
முட்டாள் காகம் சட்டையில் எச்சம் செய்தபோது.....,
இடரி சாலையில் விழுந்தபோது.....,
பகட்டான கூட்டதில் துண்டாய் நிற்கும் போது....,
எனக்காய் யாரும் அழுவதாய்
தோன்றவில்லை....,
இருந்தும் யாரோ அழுகிரார்கள்....,
பசியால் கிழிந்திரும் வயிற்றின்
ஏதோ ஒரு சதையிலிருந்து