நிராசை ......., நாம் ஒவ்வொருவரும் ஏதோ வகையில் யாரோ...
நிராசை .......,
நாம் ஒவ்வொருவரும் ஏதோ வகையில் யாரோ ஒருவரிடம் நம் மனதை பறிகொடுத்து விடுகிறோம்.காலத்தின் சூட்சிகளில் சிக்கி நம்மில் அநேகரின் ஆசைகள் தொலைந்து போகின்றன. அந்த ஆசைகள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்கொள்கின்றன . தூக்கங்களுக்கான இரவுகள் விழிப்புகளுடன் முடிந்து போகின்றன. ஆசைகளால் செறிவூட்டப்பட்ட கனவுகள் நம்மை விடாது தொல்லை செய்யும் அந்த இரவுகளின் வலி ........., தலை சாய்க்க வேண்டிய தலையணைகள் கண்ணீரின் அகதிகளின் முகாமாகிப்போகின்றது. திறந்திருக்கும் ஜன்னல் கதவுகளின் வழி , நம்மின் ஆசுவாச நொடிகள் வந்து போகின்றன. நினைவு நீரிச்சுழிகளில் சிக்கி மீள இயலாமல் தவிக்கிறோம் . நம்மின் ஆசைகள் ஒரு நொடிப்பொழுதேனும் நிறைவேறி விடாத என்ற ஏக்க பெருமூச்சு ......., கற்பனைகளில் இருந்து தப்பி யதார்த்தத்திற்கு திரும்பும்போது நம்மில் நிராசைகளே எஞ்சி நிற்கின்றன.......,
நிராசைகளோடு எஞ்சிநிற்கும்,
உங்களில் ஒருவன் .