வடு

உன் ஒரு
குறுஞ் செய்திக்காக
நான் தொலைத்த இரவுகள்
எவ்வளவு அழகானவை......,

அந்த இரவுகளை
விடவும் நீண்டிருந்தது
நான் உன் மீது கொண்டிருந்த பிரியம் .......,

உன்னை காணும்
ஒரு நொடிக்காய்
நான் கடந்து வந்த தூரங்கள்
எவ்வளவு அழகானவை.......,

கடந்து வந்த
அந்த பாதைகளை விடவும்
நீண்டிருந்தது அந்த பிரியம் ......,

நீ என்னோடு
பேசும் அந்த ஒரு
வார்த்தைக்காய்
நான் மௌனம் உடைக்காமல்
காத்திருந்த நேரங்கள்
எவ்வளவு அழகானவை .......,

மௌனங்களில் உயிர் எறிந்த
அந்த நொடிகள் .........,

எனக்காய்
ஒரு முத்தம்
ஒரு சிறு ஸ்பரிசம்
ஒரு வருடல்
என
நீ எதுவும்
தந்து விட வில்லை ......,

ஆறாத
சில வடுக்கள் மட்டும்.

எழுதியவர் : ஹாதிம் (10-Sep-19, 2:31 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
Tanglish : vadu
பார்வை : 112

மேலே