யாரும் தீண்டா என்னறை கதவுகள்,

எனக்கான இரவுகள்
எனக்கான தூக்கங்களை தருவதில்லை........,
கசங்கிய படுக்கையின் விரிப்புகளில்
தூக்கங்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன ........,

எனக்கான ஜன்னல்கள்
எனக்கான சுவாசங்களை தருவதில்லை........,
காற்றற்ற நொடிகளோடு
என் நுரையீரல்கள் நொடிந்து போகின்றன.......,

என்னறையில் தவறி விழும்
நிலவின் வெளிச்சம் கூட
எனக்காக சில சந்தோஷங்களை
விட்டுச்செல்வதில்லை........,

புறந்தள்ளி விழும் மழைத்துளிகள் கூட
ஈரத்தை மட்டும் விட்டுச்செல்கின்றன .........,

திறந்து வைத்த என்னறை கதவுகளின் வழி நுழையக் கண்டதில்லை யாரையும்

எழுதியவர் : haathim (31-Jul-19, 4:25 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 93

மேலே