இயற்கையின் காதல்

சுட்டெரிக்கும் சூரியனைத் தேடார் புலவர்
காட்டுவர் வெள்ளி நிலாப் பெண்ணையும் --- தட்டாய்
முழுநிலவாம் காண அவளை முகிலும்
சூழ்ந்ததென்பர் பேடும் மறைய

புலவரும் கவிஞரும் சூரியனைத் தேடுவதில்லை.அவர்கள் பெண்ணின் முகத்தை காண நிலவின் முழு வெள்ளித் தட்டென்பர் . அவளின் முகத்தை க்காண முடியாது நேர்ந்தாலோ மேகமென்ற முகில் நிலவான முகத்தை மறைத்தது என்பர்.




நெருப்பின் பெரும்பந்து சூரியனும் ஆணாம்
நெருங்கும் நெருப்பை நிலவும் --- அருகா
மறையும் வளர்ந்துமே தேயும் மறையும்
நிறைவது பௌர்ணமி மட்டில்





நெருப்பைக்கக்கும் பெருங் கோளான சூரியன் ஆணாம். அந்த பெரும்நெருப் பின் அருகில் வர நிலவெனும் பெண் துவண்டு போகிறாள். ஆகையால் மறைந்து ஓடுகிறாள். பிறகு அவள் முகமெனும் வெள்ளித்தட்டைக் காட்டி மீண்டும் மறைத்துத் தேய்ந்து குறைகிறாள். அவள் மாதத்திற்கு ஒருநாள் யாருடைய அரவமும் இல்லாத நிசப்தமான இரவில் உலகையும் கடலையும் மட்டுமின்றி சூரியனும் குளிர்ச்சி அடையும் விதத்தில்
ஆர்பாட்டம் செய்துகொண்டு குளிர் விக்கிறாள். அந்த ஒருநாள் தான் பௌர்ணமி.

இது புலவர்களின் சூரிய சந்திரர் வர்ணனைகள். விஞ்ஞானம் வேறுவிதமாய் விளக்குவார்.பூமி க்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரப் பௌர்ணமி என்பர்.சந்திரன் நகர நகர வளர்பிறை தேய்பிறை என்பர்.

மாபெரும் சித்தர்கள் என்ன சொல்கிறார் கள் என்பதை பிறகு தொடர்ந்து காண்போம். (வளரும்)

எழுதியவர் : பழனிராஜன் (31-Jul-19, 4:44 pm)
Tanglish : iyarkaiyin kaadhal
பார்வை : 397

மேலே