எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
கலீல் ஜிப்ரான்......,
எனக்கு நேசிக்க கற்றுக்கொடுத்த மகாகவி......,
அவன் சொற்களில் ஞான வரிகளில் .....,
என்னை தொலைத்து நான் அலைந்த காலங்கள் பல.....,
அவனின் "முறிந்த சிறகுகள்" படைப்பு எழுத்தையிம் தாண்டிய அதி அற்புத காவியம் ......,
கவிதைகளில் சலித்து போன எனக்கு புதிதாய் ஒரு முயற்சி......,
அவனின் "முறிந்த சிறகுகள்" படைப்பை தமிழ் மொழியாக்கம் செய்வதற்கு மாறாய் அவனின் அந்த படைப்பில் நான் லயித்த சில வரிகளை மட்டும் "முறித்து எடுத்த சில சிறகுகள்" எனும் தலைப்பில் இலக்கிய நடையில் ஒரு தொடராய் எழுத்து தளத்தில் சமர்ப்பிக்க விழைகிறான் ..........,
விழிப்பு:
" ஒரு ஆண் எப்பொழுது உறங்குகிறான்,ஒரு பெண் எப்பொழுது விழிக்கிறாள் என்பதை வைத்தே அ வர்களின் குணத்தை சொல்லிவிட முடியும்"
- நான்
இவன் நல்லவன், இவன் தீயவன் என எடை போடும் நண்பர்களுக்கு ஒரு அழகிய வரி
"ஒவ்வொரு பாவியும் ஒரு எதிர்காலத்தோடு இருக்கிறான்,
ஒவ்வொரு ஞானியும் ஒரு கடந்காலத்தை எதிர் கொண்டிருக்கிறான்"
கவிஞனானவன் சொற்களால் உலகையே அரவணைக்கக் கூடியவன்
உதாரணம் நான் ரசித்த வரிகள்
" என்னிடம் ஒரு குவியல் நிறைய சிப்பிகள் உள்ளது.
என்னிடம் அதை வைக்க இடமில்லாததால் உலகிலுள்ள கடற்கரைகளில் பரப்ி வைத்திரூக்கிருக்கிறேன்"
என்னை காதலிக்க யாரேனும்
தயாரா? நான் இதுவரை யாரிடமும் காட்டாத என் கவிதைகளை தருகிரேன்
இன்று
என் கல்லூரியின்
கடைசி நாள் .
நண்பர்களின் முகங்களை
தொலைக்கப் போகிறேன் .
எனக்கென ஒரு முக
தேடப்போகிறேன்
இருந்தும்
கல்லூரி நினைவுகள்
என்னை நனைக்கின்றன .
மற்றவர்களைப் போல
பொய்யாக எனக்கு
வருத்தப் பட தெரியாது
பொய் வாக்குகள் சொல்லத்
தெரியாது .
என்னளவில் மட்டும்
இந்தப் பிரிவை
சுகமாக
ரசிக்கிறேன்.
என் உணர்வுகளை
முதல்முறையாக
பிறரிடம் வெளிப்படுத்துவது
இப்பொழுது தான் .
எழுத்து தள நண்பர்களுக்கு
என் மனதில் பட்ட
ஒரு எண்ணம் .........,
தளத்தில் காதலைப்பற்றிய
பதிவுகள் நிறைந்து கிடக்கிறன
ஆனால் அவைகளில் பல போலி முகம் சூடி நிற்கின்றன .
ஒரு படைப்பாளனுக்கு காதல் மிக முக்கியம் .ஆனால்அவனின் தனிச்சிறப்பு
அதை அவன் எவ்வாறு கையாள்கிறான் என்பதில் இருக்கிறது
காதலை வுயர்தவும் வேண்டாம் .தாழ்த்தவும் வேண்டாம் ,
அதன் இயல்பில் ,அதன் வடிவில் ,அதன் அழகில்
இருக்க விடுங்கள் .
உங்கள் கவிகளால் காதல் வாழப்போவது இல்லை .
மாறாக அது காதலை
வாழ்த்துவதாக இருக்கட்டும்,
நண்பர்களுக்கு நன்றி
ஓர் மற்றும் ஒரு ...............,
தமிழ் அழகானதொரு
வடிவமைப்பை கொண்ட மொழி .......,
உதாரணங்கள் ஏராளம் .,
அதற்கோர் உதாரணம்
ஓர் -உயிர் எழுத்தை முதலாய் கொண்ட சொற்களுக்கு முன் வரவேண்டும்.
ஒரு -மற்ற எழுத்துக்களை முதலாய் கொண்ட சொற்களுக்கு முன் வர வேண்டும் .