தேடும் அவள்

நீ!!!
முந்தானைக் கையில் கொள்ள,
----வெட்கம் முந்தி நடக்க,
கால்கள் பிந்தி இருக்க,
----நினைவோ அலைந்து திரிய,

நான்,
நிகரில்லாத உந்தன் பின்னே,
----வந்தேன் எந்தன் கண்ணே,
காணும் வேட்கை முன்னே,
----கரையவில்லை இல்லை பெண்ணே!!!!

நாம்,
கதைகள் பேசும் கண்கள்,
----கானம் பாடும் வளையல்,
கரைந்து போனேன் விழியில்,
----உறவாக உன் மடியில்!!!!

உதிர அணுக்கள் நீயாய்!
உதிரும் வார்த்தையுன் பெயராய்!!
உடைந்த கண்ணாடி துகளாய்!
உருவங்கள் அத்துணையும் அவளாய்!!

கரையோடு பயணிக்கும் காற்று கணம்
----திரும்பி பார்த்தது என்னே?
பெண்ணே, கரையோடு கால்கள் உலவ,
---- ஜதிகளின் ஒலியே கண்ணே!!!

கடன் கேட்கும் கருமேகங்கள், உன்
----கருவிழிகளின் மேல்தீட்டிய கரு மை!!!
அருமை யதனழகு ஞாயிறும் திங்களும்
----ஒன்றாக உதித்த புதுமை!!!

ரீங்காரமிடும் வண்டின மதுமது தேட,
----உனை சுற்றுவதும் ஏனோ?
நானோ செவ்விதழ்களை கண்டு கள்
----உண்டதாய் உணர்ந்தேன் தானோ!!!

குழையு முன் பேச்சுக்கு குழலோசை
----தான் முன்னிற்குமோ பெண்ணே?
என்னே யதன் இனிமை மழலை
----மொழிபோல எத்துனை சுகமோ!!!

படபடவென இமைகள் சிமிட்ட,
----சலசலவென கைகள் அசைய,
சடசடவென கால்கள் நகர,
----மடமடவென நானுனை குடிக்க,

நிழலாகி நான் தொடர்ந்தேன் நினைவாலே!!!
நினைவெல்லாம் உனை நிறைத்தேன் நிஜமாலே!!!

எழுதியவர் : நவீன் குமார் ரா (30-Nov-15, 9:42 pm)
பார்வை : 132

மேலே