தூரிகை தவிப்பு

என்ன எழுதும் இந்த பேனா?
உதிராது திரியும் நெருப்பு மலரையா?
உடைந்தாலும் சிரிக்கும் வெள்ளை தட்டையா?
ஒற்றைப் புள்ளி உலகத்தையா?
காற்புள்ளியாக்கும் வால் நட்சத்திரத்தையா?
அற்புத ஒர் புள்ளியில்
அணுவொன்றில் நிற்கின்றேன்
காற்புள்ளி வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளியிட தவிக்கின்றேன்.
போராடும் தவிப்பை இன்று
ஈர கண்ணீர் தீரும்வரை
சிந்திவிடு தூரிகையோ...

எழுதியவர் : இரா ந (21-Sep-16, 1:10 am)
Tanglish : thoorikai thavippu
பார்வை : 66

மேலே