மனிதம் பழகு மனிதா
 
 
            	    
                களை வளர்த்தால் தானடா பயிர் வளர்க்க முடியும் 
யானைகட்டி போர் அடித்த - எங்கள் கழனிக்கு
களை வளர்க்கக்கூட நீரை மறுக்கிறாய் 
  
நீரை அடைக்க கதவிருக்கிறது - என்பதால் 
இஷ்டப்படி அடைத்துக்கொள்கிறாய் 
பசி மறக்க ஈரத்துணியை  வயிற்றில் போடலாம் - என்றால்
அந்த துணியை நனைக்கக்கூட  வழியில்லாமல்
வரண்டு கிடக்குதடா காவிரி 
ஏனடா வயிற்றில் அடிக்கிறாய் - என 
மத்திய சர்க்கார் புத்திசொன்னால்
அணையை திறந்துவிட்டு - தமிழன் 
முதுகிலும் சேர்த்து அடிக்கிறாய் 
கண்ணீரை   ஊற்றியாவது சம்பாவை சாகவிடாமல் 
காக்க நினைக்கும் - என்
தமிழ் சமூகத்தின் உணர்வை 
என்று தான் உணரப்போகிறாயோ!!!!!!!.....
மனிதம் பழகிக்கொள் மனிதா
தெரியவில்லை என்றால்
தமிழனிடம் வந்து கற்றுக்கொள்.....
 
                     
	    
                

 
                                