நவீன் குமார்.ந - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நவீன் குமார்.ந
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  12-Oct-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Oct-2014
பார்த்தவர்கள்:  148
புள்ளி:  18

என் படைப்புகள்
நவீன் குமார்.ந செய்திகள்
நவீன் குமார்.ந - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2017 10:10 am

மாணிக்க வீணையுடைய - அந்த
மங்கள கலைமகள் நீயென
வியந்து பார்ப்பார்கள்

பூ மற்றும் பொட்டு வைத்து
நயமுடன் நெய்த பட்டுடுத்தி
கையில் வீணையுடன் அமருகையில்

மேலும்

நவீன் குமார்.ந - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2016 10:20 pm

பயிர்ச்செடியைவிட களைச்செடி உயர வளருமாம் வயலில்

ஆயினும் பயிர்ச்செடியின் வளர்ச்சியும் மேன்மையும் மட்டுமே
இறுதியில் போற்றப்படும்

நல்ல உணர்வுடன் பயிர் வளர்க்க நினைக்கும் - உங்களுக்கு
ஒருபோதும் பாதகம் விளையப்போவதில்லை

உயர வளர்ந்து பயிரைப் பார்த்து சிரிக்கும்
களைக்குத் தெரியது, அதைக் கொன்று - தான்
அக்கழனிக்கு உரம் ஊட்டப்படும் என்று!!!

களையெனும் அந்த கழுதை கொள்ளவேண்டும் கவலை
இந்த ஏளனச் சிரிப்பை பொருட்படுத்தாமல்
நீங்கள் எட்டிட வேண்டும் NEXT LEVEL-ஐ.........

மேலும்

நவீன் குமார்.ந - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2016 1:21 pm

பங்களாக்குள் pedigree தின்று குரைக்கும் நாய்க்கு
எப்படித்தெரியும்
எச்சில் இலை சோத்துக்கு தெருநாய்ப்படும் கல்லடி

மேலும்

நவீன் குமார்.ந - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2016 2:49 pm

இலை உதிரா மரம் அவள்
இடையூறு இல்லாமல் வளருபவள்

சிறு துளி நீர்க்காட்டினாலும் போதும்
பல பல கனிதந்திடும் கண்ணியமானவள்

வேண்டாம் என உதிர்க்கும் ஒரு முடிக்கூட
இறைவனின் மடிசேரும்
நந்தவனத்தின் பூவைக் கோர்த்திடும்

கூந்தலில் சூடமுடியாத பூத்தருவாள்
சிறு இதழ் அசைவின் சிரிப்பால் அவள்

நவரசம் சமைப்போருக்கு தலை இலையாகிடுவாள்
தலைகனம் இல்லாத அவள்

வீற்றிருக்கும் இடமெல்லாம் பசுமை பரிபாலிக்கும்
பச்சை தங்கம் அவள்

தீமையெனும் தீ நெருங்கமுடியாத
ஈரம்நிறைந்தவள் அவள்

மொத்தத்தில் வாழ்வின் பொருள்
உணர்த்திடும் வாழைப்போன்றவள் பெண்

உச்சரிக்கையில் "அவள்" என்னும் சொல்லே
அமுதூ

மேலும்

பெண்மை இன்றி மண்ணில் சிறு அணுவும் இல்லை 25-Oct-2016 8:46 am
நவீன் குமார்.ந - நவீன் குமார்.ந அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2016 10:42 pm

களை வளர்த்தால் தானடா பயிர் வளர்க்க முடியும்
யானைகட்டி போர் அடித்த - எங்கள் கழனிக்கு
களை வளர்க்கக்கூட நீரை மறுக்கிறாய்

நீரை அடைக்க கதவிருக்கிறது - என்பதால்
இஷ்டப்படி அடைத்துக்கொள்கிறாய்

பசி மறக்க ஈரத்துணியை வயிற்றில் போடலாம் - என்றால்
அந்த துணியை நனைக்கக்கூட வழியில்லாமல்
வரண்டு கிடக்குதடா காவிரி

ஏனடா வயிற்றில் அடிக்கிறாய் - என
மத்திய சர்க்கார் புத்திசொன்னால்
அணையை திறந்துவிட்டு - தமிழன்
முதுகிலும் சேர்த்து அடிக்கிறாய்

கண்ணீரை ஊற்றியாவது சம்பாவை சாகவிடாமல்
காக்க நினைக்கும் - என்
தமிழ் சமூகத்தின் உணர்வை
என்று தான் உணரப்போகிறாயோ!!!!!!!.....

மனிதம் பழகிக்கொ

மேலும்

பணத்தை உண்ண முடியாது என்பது என்றாவது விளங்கும் அல்லவா நண்பரே 21-Sep-2016 11:16 am
இந்த உலகில் பணம் தானே மனிதமாகிறது எல்லோருக்கும் 21-Sep-2016 9:48 am
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) harish thangaraj மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2015 1:10 pm

வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~

நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;

பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !


* * *

சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?

உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !


* * *

மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..

என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !


* * *

காந்தம்

மேலும்

மிக்க நன்றி அய்யா 05-Dec-2016 12:34 pm
நான் வேதியல் மருத்துவ வேதியல் பயின்ற போது காதல் கற்பனை எழவில்லைபோலும் !! எழுத்து தளம் அன்று இல்லை . உங்களை போல் எண்ண காமன் காதல் அருள் கிடைக்கவில்லையே? Organic, Physical ,Inorganic & Phatmaceutical Chemistry படிக்கும்போது மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் காதல் எண்ணம் வெளியிடமுடியாது குருகுல வாசம் பிரம்மச்சர்யம்:__ இயற்கையாகவே பழமைக் கருத்துக்களுக்கு நாங்கள் அடிமையாகவே ஆகிவிட்டோம் ! உங்களையும் உங்கள் இளமைக் காதல் அனுபவங்களை எழுத்து தளத்தில் படித்து பொறாமைப் படுகிறோம் 01-Dec-2016 1:49 pm
நன்றி தோழர் 01-Dec-2016 12:17 pm
நன்றி 01-Dec-2016 12:17 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-May-2015 4:33 pm

கோபக்காரனாய் ஒருவன் வேண்டும்
கொஞ்சலும் தினம்தினம் வேண்டும்
ஆணவம் சற்று இருத்தல் வேண்டும்
அன்பிற்கு மட்டும் அடங்க வேண்டும்
அத்தை மாமன் உறவு அவன் தர வேண்டும்
அன்னை தந்தையாய் அவர்களே வேண்டும்.

***************************

நாத்தனார் சண்டைகள் சின்னதாய் வேண்டும்
அதில் நான் தினம்
தோல்வியுற வேண்டும்
மன்னிப்பு கேட்டு நான் மண்டாட வேண்டும்
அன்போடு மன்னிப்பையும் அவர்கள் அள்ளித்தர வேண்டும்

***********************
ஊரார் உச்சிக்கொட்டி தினம்
பார்க்க வேண்டும்.
கண்பட்டு விடும் என்று -அத்தை
தினம் சுத்திப்போட வேண்டும்
மருமகள் மகளாக மாறவேண்டும் வேண்டும்.
என் மணவாழ்க்கை மகிழ்ச்சி

மேலும்

நன்றி நன்றிகள் . 02-Nov-2015 11:48 am
கனவுகள் மெய்ப்படும்.... நல்லவை நினைப்பதால் தல்லதே நடக்கும். 09-Jun-2015 7:00 am
நன்றிகள் நன்றி நட்பே . 19-May-2015 7:35 pm
நன்றி நன்றி நட்பே 19-May-2015 7:33 pm
நவீன் குமார்.ந அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Apr-2015 5:48 pm

நீ கொடுத்து நட்ட ரோஜா செடியும் மரமானதே
பூக்குமென்று காத்திருந்த எனக்கோ வயதானதே

செடி ஒன்னும் மலடு அல்ல!!!!

அதுவும் கூட உன்னை மாதிரித்தான் போல
எட்டாத உயரத்தில் தான் போய் பூக்கின்றன....
எட்டியும் பறித்துவிடக் கூடாதுயென
கிளையின் முள்களும் முறைக்கின்றன....

மேலும்

நன்றி நண்பரே!!!!!!!!!!!!! 23-Apr-2015 7:34 pm
நன்றி நண்பரே!!!!!!!!!!!!! 23-Apr-2015 7:33 pm
வடிவம் கொடுங்கள் , இன்னும் மிளிரும் ... 23-Apr-2015 7:26 pm
நல்ல கவிதை வாழ்த்துக்கள் 23-Apr-2015 5:59 pm

பெண்ணே!!!
தாகம் என்றேன் நதியாகி நீர் தந்தாய்....
பசி என்றேன் பயிராகி உணவளித்தாய்....
தூக்கம் வரும்போது அன்னையாகி மடிதந்தாய்....
தோல்வின்போது தோழியாகி தோள் தந்தாய்....
வெற்றியின்போது அதன் பின்னால் நீ இருந்தாய்...
என்னை காத்து,அழித்து,படைத்து கடவுளும் ஆனாய்...
அவ்வளவு உயர்ந்தவளா நீ?
ஆனால் என் மனதில் ஏதோ ஏளனப்பார்வை!!!!!
காரணம் ஆண்ஆதிக்கம் என்ற அரளிச்செடி....



விதைத்தது யார்? என்னுள் அந்த விஷச்செடியை ....
குழப்பத்தோடு சென்றேன் அப்பாவின் அறைக்கு ...
வினவினேன் என்னுள் எழுந்ததை ??
விடையாக ஒ

மேலும்

அதுவும் சரிதான்.... 25-Nov-2014 5:35 pm
இதே கேள்வி எனக்குள் எழுந்த நொடிகளில் வந்த அநேகம் பதில் பொம்பள புள்ளயா அமைதியா இரு அதிகமா பேசாத என்று..... 25-Nov-2014 5:22 pm
மலையில் தோன்றும் சிறு அருவி போல் ஆரம்பித்து கவிதை உயர் எண்ணங்கள் என்ற மற்ற பெரும் அருவிகளை இணைத்துக் கொண்டு வெள்ளத்தின் சீற்றமாய் மாறிய சிறப்பினை கொண்டிருக்கிறது இக்கவிதை..வாழ்த்துக்கள் நண்பரே!! 19-Nov-2014 5:24 pm
நவீன் குமார்.ந - நவீன் குமார்.ந அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2014 4:38 pm

தனிமை ஒரு மாய மருந்து !
தனிமை காதலரை கனவுக்கான வைக்கும் !!
தனிமை கவிஞனுக்குக் கவி எழுத ஆற்றல் தரும் !
தனிமை கள்வனுக்குத் திருடக் கற்றுத்தரும் !!
தனிமை காரியவாதியைப் போராளியாக மாற்றிவிடும் !
தனிமை சினம் கொண்டவனைச் சிந்திக்கவைக்கும் !!
தனிமை சிந்திப்பவனைச் சிகரத்தில் வைக்கும் !
தனிமை ஒரு மாய மருந்து.....!!!

மேலும்

நான் எபோழுதும் ஒரே நிலையில் இருப்பதில்லை நண்பா..... 21-Nov-2014 8:39 pm
இதில் நீங்கள் யார்???? 18-Nov-2014 5:00 pm
அருமை ! 17-Nov-2014 3:35 pm
நல்ல முயற்சி 17-Nov-2014 3:10 pm
நவீன் குமார்.ந - நவீன் குமார்.ந அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2014 4:38 pm

ஆயிரம் பெண்ணைக் காதல் கொண்டாலும்
கிடைக்காது
அதுப் போன்ற இன்பம்!!
தன் இடையில் மகர முத்துடுத்தியத்
தமிழ் என்னும்
அந்த பெண்ணைக் காதலிக்கையில்......!!!!

மேலும்

அருமை மிக அருமை படித்தேன் ரசித்தேன் 23-Feb-2015 5:09 pm
//தன் இடையில் மகர முத்துடுத்தியத் தமிழ்// வெகு அழகு வாழ்க வளமுடன் 23-Feb-2015 5:05 pm
காதலிப்பது சரி கைவிட்டு விடாதே.... 23-Nov-2014 4:07 pm
நவ்றி நண்பரே....!!!!!!! 16-Nov-2014 2:46 pm
நவீன் குமார்.ந - நவீன் குமார்.ந அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2014 4:14 pm

முடத்துடன் வாழ்பவர்க்கும் மோச்சம் தரும்
மாமருந்து தமிழ்!
அத்"தமிழ்"
என்னும் மூன்ரெழுத்தின் வழிப்பிறந்ததே
எனது "உயிர்" என்னும் மூன்ரெழுத்து
இத்தாய்த் தமிழுக்குக் கேடு நேருமெனில்
அவ்வுயிர்,
"மயிர்" என்னும் மூன்ரெழுத்திற்கும் மதிப்பாகாது...

மேலும்

thanks for all ur comments .....please give ur comments on my other poems friends .... 21-Nov-2014 8:37 pm
அழகு 17-Nov-2014 3:07 pm
எழுத்துப் பிழைகளை பார்க்கவும். வார்த்தைகளை ஆய்ந்து அளியுங்கள் .... தமிழை வாழ்த்தியதற்கு நன்றி நவீன் 17-Nov-2014 2:43 pm
அழகு :) 17-Nov-2014 2:37 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (45)

தமிழன் ராஜி

தமிழன் ராஜி

வேலூர்
ஜெனி

ஜெனி

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (46)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே