வேண்டாம் இந்த வேளாண்மை

பெண்ணே!!!
தாகம் என்றேன் நதியாகி நீர் தந்தாய்....
பசி என்றேன் பயிராகி உணவளித்தாய்....
தூக்கம் வரும்போது அன்னையாகி மடிதந்தாய்....
தோல்வின்போது தோழியாகி தோள் தந்தாய்....
வெற்றியின்போது அதன் பின்னால் நீ இருந்தாய்...
என்னை காத்து,அழித்து,படைத்து கடவுளும் ஆனாய்...
அவ்வளவு உயர்ந்தவளா நீ?
ஆனால் என் மனதில் ஏதோ ஏளனப்பார்வை!!!!!
காரணம் ஆண்ஆதிக்கம் என்ற அரளிச்செடி....



விதைத்தது யார்? என்னுள் அந்த விஷச்செடியை ....
குழப்பத்தோடு சென்றேன் அப்பாவின் அறைக்கு ...
வினவினேன் என்னுள் எழுந்ததை ??
விடையாக ஒரு அடி கன்னம் சிவந்தது , அழுதேன்...
"என்னடா பொம்பள மாதிரி அழுற ???" அப்பாவிடமிருந்து
பச்சை மிளகாவாய் உரைத்தது அந்த கேள்வி என் புத்தயில்
இதைகூற ஓடினேன் அம்மாவிடம் சமையல் அறைக்கு
"அடுப்படில ஆம்பளைக்கு என்ன வேலை??" என்றாள்
உரைத்த புத்தி உறங்கி போனது இந்த கேள்வியால்....



அழுகை பெண்ணின் அடையாளமா?
அடுப்படியில்தான் பெண்ணின் வேலையா?
இந்த நிலைக்கு யார் காரணம் ஆணா? பெண்ணா?
பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு
என் மனதில் அத்தனை கேள்விபடலம்!!!!!!!......



"ஆண்கள் எப்போதும் ஆழச்சிந்திப்பர்கள்!!!!!" என்ற வாசகத்தை
ஏதோ வார இதழில் வாசித்த ஞாபகம்...
ஆழச்சிந்த்தேன்,உறங்கிப்போனேன்....
விடிந்தது
வந்தேன் வேண்டாம் இந்த ஆராய்ச்சி என்ற நிலைக்கு....
ஆணோ? பெண்ணோ? அதை யார் செய்திருந்தாலும் கவலை இல்லை....
என்ற முடிவும் வந்தது..


ஆனால் ஒன்று
கொண்டாடத்தேவையில்லை இந்த பெண்களை
மதித்தால் போதும்........



வேண்டாம் இந்த விஷச்செடி விவசாயம்,
களையெடுப்போம் அதனை இன்று முதல்.......

எழுதியவர் : ஜெயக்குமார் கல்யாணசுந்தர (10-Nov-14, 12:01 pm)
பார்வை : 230

மேலே