வேதியியலும் என்னவளும் - கற்குவேல் பா

வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~

நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;

பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !


* * *

சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?

உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !


* * *

மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..

என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !


* * *

காந்தம் ;
இரும்பு ,
நிக்கல் ,
கோபால்ட் போன்ற
தனிமங்களைக் கவரும்
தன்மையுடையது ..

உன் கண்கள் ;
என்னை ,
அவனை ,
அவர்களைக் கவரும்
தன்மையுடையவை .. !


* * *

அமிலமும்
காரமும் ;
வேதியலின்
இரு கண்களாம் ..

உன்
இன்பங்களும்
துன்பங்களும்
என் இரு கண்கள் .. !


* * *

வேதியல்
செய்முறை
வகுப்பில் ,
பிப்பெட்
பியூரெட் என ..

உனக்காக
காத்திருக்கும்
பட்டியலில் ,
இன்று நானும் .. !


* * *

அது என்னடி !
நீ தொடும்
நேரங்களில்
மட்டும் ..

நீர்த்த
ஹைட்ரோ குளோரிக்
அமிலமும் ;
கந்தக அமிலமாய்
பொங்கி எழுகிறது .. !


* * *

நீ உடைத்த ,
டெஸ்ட் டியூப்
மைக்ரோ பிப்பெட்
கோனிக்கள் பிளாஸ்க்
வரிசையில் ..

இன்று
என்னையும்
என் காதலையும்
சேர்த்துவிடாதே .. !

- கற்குவேல் . பா

( **குறிப்பு - படம் எந்த ஒரு தவறான எண்ணத்திலும் பதிவிடப்படவில்லை )

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (16-Jun-15, 1:10 pm)
பார்வை : 924

மேலே