காதலித்துப் பார்

கண்ணை மூடினாலும்...
-பார்வை தெரியும்;
காதலித்துப் பார்...
-அதன் அர்த்தம் உனக்கு புரியும்!

தவம் இருந்தாலும்...
-தூக்கம் வராது;
ஆனால்...
கனவு மட்டும்...
-கேட்க்காமலே வரும்!

வெயில்...
-சுட்டெரித்துக் கொண்டிருக்கும் ;
ஆனால்...
உனக்கு மட்டும்...
-இடி மின்னலுடன் மழை பொழியும்!

எந்த நாட்டில்...
-செய்த கண்ணாடி என்று தெரியவில்லை;
அதில்...
உன் முகத்தை பார்த்தால்....
-அவளின் முகம் தான் தெரியும்!

புத்தகம்...
-உனக்கு தொலைக்காட்சியாகும்;
ஆனால்...
அதில்...
-அவள் உருவம் மட்டும் ஒளிபரப்பாகும்!

உன் இதயத் துடிப்பே...
-நின்று விட்டதாய் தோன்றும்;
ஆனால்...
உனக்காக...
இன்னொரு இதயம்...
-அங்கு துடித்துக் கொண்டிருக்கும்!!!

காதலித்து பார்...
காதலை அனுபவித்து பார்...
- மகேஷ்

எழுதியவர் : (16-Jun-15, 12:19 pm)
Tanglish : kaathalithup paar
பார்வை : 99

மேலே