விபச்சாரியின் காதல்

சிவப்பு வண்ண உடை
நேர்த்தியாக வாரப்பட்டகூந்தல்

பூத்துக் குலுங்கும் மல்லிகை
அழகான வட்ட முகம்

ஆபரணமில்லா கழுத்து


சிறு புன்னகை எனை பார்த்து

அவள் சிரிப்பது எனை பார்த்து தானோ

மீண்டும் உறுதி செய்து கொள்கிறேன்

ஆம்...................

நீண்ட நாட்களாக இப்படித்தான் நடக்கிறது

ஆனால் இன்றோ,,,,,,,,,,,,

எனை பற்றிய விசாரிப்புகளுடன்
பேச முற்படுகிறாள்

அவள் மார்பு மட்டுமல்ல
மனமும் அழகுதான்

அவள் உதடுகள் ஏதோ பேச
கண்கள் புது ஒளி வீச

அவள் செய்கைகள் என் மீதான
காதலை பறைசாற்ற

எங்கள் முதுகை நூறு ஜோடி
கண்கள் வெறித்துத் தாக்க

நானோ கூச்சத்தில் அலைபாய
அவளோ காதலில் அலைபாய

முதுகை வெறிக்கும் கண்களுக்கு
என்ன வேண்டுமாம் இன்னும்

முந்தானை விரிப்பாளா
என்ற என்னமோ இன்னும்

அவள் விபச்சாரி ஆனதை
ஏற்றுக் கொண்ட சமூகம்

அவள் என் வீட்டுக்காரி ஆவதை
ஏற்றுக்கொள்ளவில்லை

மாட்டு ஜனங்கள்
மனித நேயமற்ற மிருகங்கள்

என்று தீருமோ
வக்கிரப் பார்வை

அன்று மாறும்
தாசியின் மேன்மை!!

எழுதியவர் : messersuresh (16-Jun-15, 11:47 am)
பார்வை : 183

மேலே