பெண்
இலை உதிரா மரம் அவள்
இடையூறு இல்லாமல் வளருபவள்
சிறு துளி நீர்க்காட்டினாலும் போதும்
பல பல கனிதந்திடும் கண்ணியமானவள்
வேண்டாம் என உதிர்க்கும் ஒரு முடிக்கூட
இறைவனின் மடிசேரும்
நந்தவனத்தின் பூவைக் கோர்த்திடும்
கூந்தலில் சூடமுடியாத பூத்தருவாள்
சிறு இதழ் அசைவின் சிரிப்பால் அவள்
நவரசம் சமைப்போருக்கு தலை இலையாகிடுவாள்
தலைகனம் இல்லாத அவள்
வீற்றிருக்கும் இடமெல்லாம் பசுமை பரிபாலிக்கும்
பச்சை தங்கம் அவள்
தீமையெனும் தீ நெருங்கமுடியாத
ஈரம்நிறைந்தவள் அவள்
மொத்தத்தில் வாழ்வின் பொருள்
உணர்த்திடும் வாழைப்போன்றவள் பெண்
உச்சரிக்கையில் "அவள்" என்னும் சொல்லே
அமுதூர செய்திட
இந்த "பெண்" என்னும் சொல்லுக்கு - இன்னும்
ஆயிரம் பொருள் தந்திட தோனுதே - ஆனால்
ஏனோ அகராதியைத் திருத்தும் உரிமம்
இந்த பாவிக்கு இல்லாமல் போனதே.......