களைக்கு வேண்டும் கவலை, பயிருக்கு அல்ல

பயிர்ச்செடியைவிட களைச்செடி உயர வளருமாம் வயலில்

ஆயினும் பயிர்ச்செடியின் வளர்ச்சியும் மேன்மையும் மட்டுமே
இறுதியில் போற்றப்படும்

நல்ல உணர்வுடன் பயிர் வளர்க்க நினைக்கும் - உங்களுக்கு
ஒருபோதும் பாதகம் விளையப்போவதில்லை

உயர வளர்ந்து பயிரைப் பார்த்து சிரிக்கும்
களைக்குத் தெரியது, அதைக் கொன்று - தான்
அக்கழனிக்கு உரம் ஊட்டப்படும் என்று!!!

களையெனும் அந்த கழுதை கொள்ளவேண்டும் கவலை
இந்த ஏளனச் சிரிப்பை பொருட்படுத்தாமல்
நீங்கள் எட்டிட வேண்டும் NEXT LEVEL-ஐ.........

எழுதியவர் : ந.நவீன் குமார் (16-Nov-16, 10:20 pm)
சேர்த்தது : நவீன் குமார்.ந
பார்வை : 176

மேலே