தமிழன் ராஜி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழன் ராஜி |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : 09-Oct-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 158 |
புள்ளி | : 50 |
காலமுள்ள வரையில்
நான் தமிழை
பேச வேண்டும்
என் கல்லறையிலும்
தமிழ் வாசம் வீச வேண்டும்
தோழியே என்
வாழ்க்கையின் பாதியே
நட்பின் இலக்கணத்தை
நீ கொடுத்தாய்
என் இதயத்தில்
நட்பின் இடத்தை
நீ பிடித்தாய்
நீ வாழும் காலத்தில்
எனக்கு சோகமில்லையடி
உன் நினைவுகள் கூட
எனக்கு ஆறுதல்
சொல்லுமடி
ஒரு பெண்ணால் இறக்கும்
நிலைக்கு போனேனடி
உன்னால் இன்று
இருக்கும் நிலைக்கு
ஆனேனடி
அமர்ந்து பேசிய
வார்த்தைகளெல்லாம்
அழகாய் தோன்றுதடி
உன் அன்புக்காக
எல்லோர் இதயமும்
ஏங்குமடி
இந்த ஜென்மத்தில் நீ
மட்டும் போதுமடி
இன்னொரு ஜென்மத்தில்
நீயாக நான்
வாழவேண்டுமடி
உன் தோழியாக......
அன்புள்ள தோழி
செல்விக்கு
ஆம்ஸ்ட்ராங்
நிலவில் கால் வைத்தாரென்று
படிக்கின்றேன்,
நிலா வெளிச்சத்தில்!
***************
படம் வரைந்து பாகம் குறி,
கேள்விக்கு
எனக்குதான்
முழுமதிப்பெண் கிடைத்தது;
நிலா வெளிச்சத்தில் படிப்பவனுக்கு
எளிதுதானே?
நிலாவை வரைவது!!
**************************
என் இமைகளில் என்றும் நீ ....
இமைக்கும் பொழுது எல்லாம்
உன்னை சிதறி விட அல்ல....
உறங்கும் போது கூட
நீ என் விழிகளிலே இருந்து விட....
உன் நினைவுகள் வலியது
அதனால் தான் என்னவோ
உன் நினைவில்லா உறக்கம்
இன்று வரை சாத்தியம் ஆகவில்லை ......
மூடியபடி எப்பொழுதும் என் விழிகள்
ஏனெனில்
இமைக்கும் பொழுது
நீ சிதறி விடாமல் இருக்க .....
அன்புத்தாயே
அழகாக எனைத்தூக்கி
அம்சமாக அலங்கரித்து
அம்புலியை காட்டி சோறூட்டுவாய்....!
ஆருயிரால் இணைந்த நீ
ஆவலுடன் எனையிழுத்து
ஆசை முகத்தில் முத்தமிட்டு
ஆராரிரோ பாடி உறங்க வைப்பாய்......!
இனிய குரலால் நீ பாடும்
இனிய தாலாட்டிலும்- உன்
இரு கைகளும் என் முதுகைத்தட்ட
இமை மூடி எனை மறந்தேனம்மா......!
ஈன்றவள் நீ
ஈருயிரால் இணைந்தவள் நீ
ஈசன் வந்துனை கேட்டால் கூட
ஈயேனம்மா.....!
உன்
உதிரத்தை எனக்கூட்டி
உயிர் தந்த உன்னை -என்
உயிர் பிரிந்தாலும் மறவேனம்மா.....!
ஊட்டி வளர்த்தாய் நீ
ஊர் பேச வைத்தாய் நீ
ஊசி முனை என் மேல் பட்டாலும்
ஊதுலை கனலாவாயம்மா ....!
என்றும்
என் மன
உன் விழிகளில்
வழியும் கண்ணீர்துளிகளாக
நான் வழியவேண்டும்
நீ அழவேண்டும்
என்பதற்காக அல்ல
அப்படியாவது
உன் கன்னத்தை
தொடவேண்டும்
என்பதற்காக..
உன் விழிகளில்
வழியும் கண்ணீர்துளிகளாக
நான் வழியவேண்டும்
நீ அழவேண்டும்
என்பதற்காக அல்ல
அப்படியாவது
உன் கன்னத்தை
தொடவேண்டும்
என்பதற்காக..
பெண்ணே
மயில்கள் வாழும்
இடத்திற்கு நீ
வந்து போகாதே
மேகமென நினைத்து
தன் தோகையை விரித்து
ஆடி விடப்போகிறது
உன் கூந்தலைக்கண்டு....
கவிஞர்கள்
எல்லாம் கைகளால்
கவிதை எழுதுகிறார்கள்
ஆனால்
இவள் சற்று
வித்தியாசமானவள்
கண்களால்
கவிதை
எழுதுகிறாள்.....
பெண்ணே
உன் கண்களை
படைத்தது
கம்பனா? இல்லை
பிரம்மனா?
உன் கவி பேசும்
கண்களை கண்டதும்
நானும்
கவிஞனானேன்......