வெற்றிப்பயணம்
விழிகளை மூடினால் தூக்கமில்லை
தோல்வி உனக்கொரு பாரமில்லை
உன்னால் முடியாத ஏதுமில்லை
வீழ்ந்து கிடந்தால் பயன் ஏதுமில்லை
எழுந்து வா! எழுந்து வா!
எரிமலையாய் எழுந்து வா!
விரைந்து வா!விரைந்து வா!
விடைகளை தேடி விரைந்து வா!
போராடு போராடு!
உன் வாழ்க்கையோடு போராடு!
உரம்போடு உரம்போடு!
உன் கண்ணீரோடு உரம்போடு!
நடமாடு நடமாடு!
உன் வெற்றி பாதையை நோக்கி நடமாடு!
தடைபோடு தடைபோடு!
உன் அச்சத்தை தடைபோடு!
இப்படிக்கு
ப.தவச்செல்வன்