இறவா காதல்2
கள்வனே
நினைவை திருடி இருந்தால்
மனதிடம் கேட்டிருப்பேன், திருடியது
என்னை என்றால் யாரிடம்
நான் கேட்பேன் உன்னையன்றி...
ஆருயிரே
பஞ்சபூத உடலில் குடிகொண்ட
என்னுயிரை ஓருயிராய் உருவாக்கி
உருஆக்கி உடல் இயக்கம்
தந்தவனும் நீயன்றோ...
தங்கமே!!!
உருக்கி உரு கொடுத்தால்
சிரிக்கும் தங்கமல்லாமல் உனை
கண்டாலே சிரிக்கும் தங்கமாக்கினாய்
ஏற்ப்பாயே என் தங்கமே...
செல்லமே...
கொஞ்சி பேச ஆசையில்லையோ
கொஞ்சம் பார்க்க நேரமில்லையோ
கொட்டிச் செல்ல கோபமில்லையோ
எனை தூக்கிச் செல்ல துன்பமென்னவோ!!!
ஓருயிரே
ஓயாமல் வென்று விட்டாய்
மனதை, ஊடலுடன் நின்றுவிட்டாய்
எதிரில், வந்து உயிரென
கலந்துவிடு உடலில் ஓருயிராய்,..
ரா நவீன் குமார்