இருள் விழிகள்

வண்ண விளக்கின் அலங்காரம்
எண்ண விளக்கின் ஆங்காரம்!
மன்னவன் இவனென பெண்மனம் முடிவெடுக்க
தென்னவன் மருமகன் பெண்வீட்டார் மணமுடிக்க
தன்னவன் நினைவை ஆழ்மனதில் புதைத்தாள்!!

கண்ணவன் சொன்ன வார்த்தையெண்ணி
கணவன் இவனை எதிர்நோக்கி
கலக்கத்தில் பெண்ணவள் தேரில்
மேளநாதம் நர்த்தனமாட ...
மௌனவதம் மனதில் தொடர...
மெல்ல நகருது வெண்ணிலா ஊர்வலம்!!

மெல்லவும் முடியாது
வெளிசொல்லவும் முடியாது
விடியாவாழ்வை எண்ணி
விடியலை எதிர்நோக்கி...
பேதையவள் கலக்க போதையில்!!

முத்துமழைகள் கண்ணில் மொட்டுமொட்டாய்!!
முத்தமிட்டது மடியை சொட்டு சொட்டாய்!!
கண்முன் தோன்றிடும் காதல் கடிதம்கட்டுகட்டாய்!!
எண்ண புதையலில் மறித்து விட்டாள்!
ஏதோ மிஞ்சிய உடலுடன் மேடை யில் மெல்லமர்ந்தாள்

வண்ண விளக்கின் மிண்ணொளியில்
புன்னகை இழந்து பொன்னகை சுமந்து வீற்றிருந்தாள்
மணபெண் வீட்டார் மகிழ்ச்சியில் குதுகளிக்க
மரணகயிறாய் மாங்கல்யம் சூடிக்கொண்டாள்
என்குலப் பெண்களின் இன்றைய நிலையிதுவே!
என்று இந்நிலை மறித்திடுமோ!!?

எழுதியவர் : (17-Apr-15, 12:49 am)
சேர்த்தது : கனகரத்தினம்
Tanglish : irul vizhikal
பார்வை : 100

மேலே