காதல் உயிர் பிரிவு

திங்கள் முகமே திகட்டா அழகே பிரிந்தாயே
தீப சுடரே கண்ணின் ஒளி அணைத்தாயே

மனமோ பாலை ஆனதே
தினமோ மாலை ஆனதே

பாசப்பேரலை அடிக்க நீயெனை வெறுத்தாயே
பாசத்தின் வடிவம் நானென்ன சொன்னதை மறந்தாயே

திசைகள் மறந்து நிற்கின்றேன்
எனையே சுமந்து நடக்கிறேன்

மலர்களை நான் பறித்த போதெல்லாம் வலியென தடுத்துவிட்டாய்
மனதினையே பறித்து செல்கின்றாய், வலியென உணரவில்லையா?

காதல் வரம் கேட்டேன், நீயும் காற்றாய் நுழைவேன் என்றாய்,
காற்றும் வற்றிடுமோ? கானல் நீராய் கையில் கிடைக்காமல் மறைந்திடுமோ?

கண்ணீர் கடலிலே மிதக்க வேண்டுமென அன்றே ஏன் சொல்லவில்லை
கண்ணீர் கடலில் காதல் ஓடத்தில் பயணித்தால் தவறுமில்லை

காதல் மணம் நுகர்த்தேன்
கையில் அள்ளி ரசித்தேன்
நாவில் கொள்ள துடித்தேன்
கைவிட்டு போக வெடித்தேன்

இரா ந

எழுதியவர் : இரா ந (11-Sep-16, 8:01 pm)
Tanglish : kaadhal uyir pirivu
பார்வை : 139

மேலே