முத்தமிட்ட நொடியில்

முத்தமிட்ட நொடியில்

என் விழியும் அவள் விழியும் பார்வையாலே
முத்தமிட்டுக்கொண்ட நொடியிலே
நான்கு விழிகள் அங்கே சத்தமின்றியே
புது காதல் அத்தியாயம் வரைய தொடங்கியதே....

என் சுவாசத்தோடு அவள் மூச்சுக்காற்று
முத்தமிட்டுக்கொண்ட நொடியிலே
இரு உயிர்கள் ஒரு உயிராகி
இருவர் சுவாசங்களும் காதல் வானிலையில்
நேசமாய் வாசம் வீசியதே....

அவள் கன்னத்தில் என் உதடுகள் காதல்
முத்திரை பதித்த நொடியிலே
என் உதடுகள் உதட்டுச்சாயமின்றியே
அவள் கன்னச்சிவப்பால் உதிரத்தின்
நிறமாக உருமாறிப்போனதே.....

என் இதழ்கள் அவள் இதழோடு
முத்தமிட்டுக் கொண்ட நொடியிலே
இவ் அகிலம் முழுதாய் நான் மறந்தே
எனையே முழுதாய் நானும் தொலைத்தேனே
என் அவளிடம்.....

என் மரணமும் அவள் மரணமும்
முத்தமிட்டுக்கொண்ட நொடியிலே
மௌனமாய் எங்கள் காதலும்
மரணம் தாண்டிய காவியமாய்
கல்லறையினுள்ளே வாழ்ந்திடும்
அமர காவியமாய் ஆகியதே.....!!

எழுதியவர் : அன்புடன் சகி (11-Sep-16, 7:19 pm)
பார்வை : 480

மேலே