விந்தை புரியநீயும் வா சிந்தியல் சித்திரங்கள்
தேனமுதும் நீஎனக்கு தென்றலும் நீஎனக்கு
கான அமுதினை தேன்தமிழில் நீதர
வானமுதும் ஏனோ எனக்கு !
சிந்தியலில் சிந்திடும் தென்பொதிகை நல்வெண்பா
சிந்தாத தேனேந்தி நிற்கும் மலர்ப்பூங்கா
சிந்திக்கும் என்கவிப் பா
அந்தியின் மந்திரம்பா டும்வான் பறவைகள்
விந்தை தனில்விரியும் ஆதவன் பொன்கதிர்கள்
விந்தை புரியநீயும் வா
----கவின் சாரலன்
ஒரு விகற்ப சிந்தியல் வெண்பாக்கள்
ஆர்வலர்கள் பார்க்க பழகுக