காதலிரு கண்களின் காந்த அலைகளால் தூதுவிடும் சேதி யாதோ

ஏழிசைக் கப்பால் எழில்பாடும் மௌனமோ
தாழிடா நெஞ்சினின் சாளரத் தென்றலோ
காதலிரு கண்களின் காந்த அலைகளால்
தூதுவிட்டா யோதோழி கூறு

ஏழிசைக் கப்பால் எழில்பாடும் மௌனமோ
தாழிடா நெஞ்சினின் தென்றலோ- வாழியநீ
காதலிரு கண்களின் காந்த அலைகளால்
தூதுவிடும் சேதியா தோ

எழுதியவர் : கவின் சாரலன் (4-Nov-24, 10:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே