தென்னை மரத்தினில் பொன்மேனியைச் சாய்த்து என்ன நினைக்கின்றாய்நீ எந்தனெழில் காதலி

புன்னகை பூவதனம் பூக்களின் நந்தவனம்
மின்னும் நயனங்கள் மானினம் தந்தவரம்
கன்னம் இரண்டுமோ காஷ்மீர்ஆப் பிள்தோட்டம்
தென்றலின் ஊஞ்சலோகே சம்

---ஒரு விகற்பஇன்னிசை வெண்பா

புன்னகை பூவதனம் பூக்களின் நந்தவனம்
மின்னும் நயனங்கள் மானினம் தந்தவரம்
கன்னம் இரண்டுமோ காஷ்மீர்ஆப் பிள்தோட்டம்
தென்றலின் ஊஞ்சலோகே சம்இளம் மான்விழியே
அன்னமும் தோற்கும் அணிநடை எங்குகற்றாய்
மன்னன் நளனும் மிகவியந்து பார்த்திடுவான்
தென்னை மரத்தினில் பொன்மேனி யைச்சாய்த்து
என்னநினைக் கின்றாய்நீ எந்தனெழில் காதலி
என்னைத்தா னேசொல் எழில்

---- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (6-Nov-24, 10:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே