உன் முத்தத்திற்காக-3

என் அன்பே...!
உன் விழி என்ன
என்னை செதுக்கும் உளியா
நாளுக்கு நாள் எனக்கே
நான் அழகா தெரிகிறேன்...!

உன் வீட்டு கண்ணாடி
என்ன மயக்கண்ணாடிய
நீ போன பின்னும்
உன் முகம் காட்டுகிறது - அழகாக
என் முகத்தில்....!

உன் பார்வையால்
என் உயிரை
மொத்தமாக தின்றுவிடாதே
கொஞ்சம் மிச்சம் வை
இருஜென்மம் வாழவேண்டும்
உன்னோடு...!

கோபப்பட்டு எனக்கு
முத்தம் கொடுத்துவிடாதே
என் மனம் எரித்துவிடும்
உன் முத்த தீயால்...!

என் காதலி
கொஞ்சம் காதலி
என்னை கொஞ்சி காதலி...!

-ஜ.கு.பாலாஜி.-

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (11-Sep-16, 6:19 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 231

சிறந்த கவிதைகள்

மேலே