ஏரிகள்
💧💧💧💧💧💧💧💧💧💧💧
*ஏரிகள்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💧💧💧💧💧💧💧💧💧💧💧
அன்று
கிராமத்தில்
ஏரி இருந்தது
இன்றும் இருக்கிறது
ஏரியில் கிராமம்...
நாம்
ஏரியை மறந்தாலும்....
மழை நீர் மறக்காமல்
ஏரியைத் தேடி வருகிறது
அதைத்தான்
நாம் வீட்டுக்குள்
வெள்ளம்
புகுந்து விட்டது என்று
சொல்கிறோம்.....
மனிதர்களின்
மனங்களைப் போலவே
எத்தனையோ ஏரிகள்
இன்னும் இருக்கிறது
தூர் வராமலேயே...
கிராமங்கள
ஏரியின்
அடையாளமாக இருந்தது....
இன்று
கிராமங்களே
அடையாளம்
இழக்கும் போது
ஏரிகள் எப்படி இருக்கும்......
ஏரியில்
அன்று மீன் பிடித்தார்கள்
இன்று
ஏரியில் இடம் பிடிக்கிறார்கள்....
தாகம் தீர்க்கும்
ஏரிகள் இருக்கிறது
தாகத்தோடு....
அழுக்கு நீக்கும்
ஏரிகள் இருக்கிறது
அழுக்கோடு....
மழை நீர்
ஆடையை உடுத்திய
ஏரிகளுக்கு
குப்பைக கூளங்களை உடுத்தி
அசிங்கப்படுத்துகிறோம்...
ஏரிகள்
மலையேறி
போவதற்குள்
பராமரிப்போம்...!
பாதுகாப்போம்...!
*கவிதை ரசிகன்*
💧💧💧💧💧💧💧💧💧💧💧