கைரேகை

வையகத்தில் மலர்ந்த
வண்ண மலர்களின்
வாழ்க்கை வரிகள்..

மரண எல்லையை
மௌனமாய் குறிக்கும்
புள்ளிகளின் சேர்க்கை

காயம் பட்டாலும்
கணல் கொண்டு சுட்டாலும்
கரையாத காலனின்
கல்வெட்டு...

ஜோசிய காரனுக்கு
யோசனை சொல்லும்
முழுமைப்பெறாத கோடுகள்

இறைவன்
நாம் இன்னல்பெற
இட்டுச் சென்ற
கீறல்கள்

சொந்தக்காரனே
அறியமுடியாத
சொல் வரிசைகள்

பிரம்மன் தொடங்கி
விஷ்ணு தொடர்ந்து
சிவன் முடிக்கும்....
மர்மக் கலை..

எழுதியவர் : எ.திருச்செல்வம் (10-Aug-16, 10:04 am)
Tanglish : kairekai
பார்வை : 128

மேலே