என் நினைவுகளே

நினைவுகள்....
சுகமான சுவடுகள்...
சில தருணம்
சுகமான சுமைகள்...
பகலும் இரவுமாய்,
சோகமும் சந்தோசமுமாய்,
கலந்ததோர் கலவை....

சில தருணங்களை நினைக்கையில்.
"கண்ணீரில் கசிந்து வெளி வரும்
ஒரு உறவின் உருவம்"

கடந்து வந்த பாதையின் கால்தடங்கள்,
ஒவ்வொருவருக்குள்ளும் புதைக்கப்பட்ட
பழைய நினைவுகள் மரமாய் முளைத்திடும் தருணம்,
வலியால் வெளிவரும் கண்ணீர் துளிகள்...

கனவுக்கும் நினைவுக்கும் உள்ள பாலம்.,,
பேசிய வார்த்தைகள்...
பழகிய நாட்கள்...
என்று சிறிது சிறிதாய் சேகரித்த
நினைவு பொக்கிஷங்கள்..
.
"தென்றலாய் புன்னகைத்த தருணம்,
புயலாய் சோகம் வீசிய தருணம்,
என இருவண்ணமும் புதைக்கப்பட்ட வண்ண நிறக்கலவை பூசிக்கொள்ளா
மனிதன் உண்டோ இவ்வுலகில்"

வற்றா நதியாய்...
வசந்த கால காற்றாய்...
சில்லென சிலிர்க்க வைக்கும்
சிறு தூறலாய்...
மரணமும் பிரிக்க கூடாத
நாம் என்னும் உறவை
நம் உடல் பிரிந்து வந்தாலும்
"பிரியாமல் நினைவுடன்
ஒரு படலம் நெஞ்சோடு படிந்திருக்கும்"

ஏற்ற தாழ்வு பாராமல்
எல்லா மனிதருக்கும்
கேட்காமலேயே கிடைக்கும் ஒரு செல்வம்
வேறேது நம் நினைவுகளை தவிர...!!!

எழுதியவர் : அரவிந்த் .C (23-Feb-14, 6:23 pm)
Tanglish : en ninaivukale
பார்வை : 636

மேலே