அரவிந்த்.C - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அரவிந்த்.C |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 09-Aug-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-May-2012 |
பார்த்தவர்கள் | : 1402 |
புள்ளி | : 713 |
என்னைப் பற்றி
கவியெழுது என்று இதயம்
விரும்பியது...!
என்ன செய்துவிட்டேன்
எனக்கெதற்கு கவி என மூளை
விவாதம் செய்தது...!
என்ன செய்தேன் நான்...?
அனுதினமும்
அக்கிரமம் நிறைந்த உலகில்
அனுசரித்து அமைதியாய் செல்லும்
அற்ப வாழ்க்கை மட்டுமே வாழ்கிறேன்...!
கலவரங்களுக்கிடையில்
கண்களை மூடி
குருடனாய்
இருட்டினில் வாழ்க்கை...!
பிறந்தேன்...
பள்ளி பருவம் முடித்தேன்...
கல்லூரியில் நுழைந்தேன்...
வெளியேறினேன் நான்காண்டுகள் பிறகு...
வெற்றி பெற்றுவிட்டதாய்
எண்ணி கொண்டேன்...
இது வெற்றியா...???
"பகுத்தறிவு சொல்லித்தரா
ஒரு கல்வி.."
அதை கற்றதற்கு பெருமைப் படுவதா..?
இது சாதனை என்றெண்ணி
கவியெழுதி மகிழ்வதா...?
கொலைகள்...கொள்ளைகள்...
இன்னும் சில
கொடூர மிருகத்தின்
கற்பழிப்பு நிகழ்வுகள்...
என்று சகதியில் நீந்தி கொண்டிருக்கிறேன்..
இதை மாற்ற முடியா எனக்கு
கவியில் மகுடம் தேவையா...
"மூளையின் விவாதம்
சரியென்றது மனது..."
மாற்றம் வேண்டும்
என்ற எண்ணம்
எரிய துவங்கியது
என்னுள்...
"மாற்றம் பெறாமல்
மாற மாட்டேன் என்றது
மனம்.."
மாற்றம் நிகழ்த்தி
என்னைப் பற்றி
பிறர் கவியெழுத வைப்பேனா..?
இல்லை
நான் மாறி
இச்சகதியில் மிதந்தே
இறப்பேனா...!?
தோல்விகளும் அவமானங்களும் அசிங்கம் அல்ல உன் நாளைய வெற்றியின் அடையாளங்கள்
தோல்விகளுக்கும் வெற்றிகளுக்கும் இடையினில் இருக்கும் இடைவெளி தான் வாழ்க்கை
வெற்றி என்பது தேங்கி கிடைக்கும் குளம்
தோல்வி என்பது விழுந்து எழுந்து ஓடும் காட்டாறு
வெற்றி என்பது தலையை அலங்கரிக்கும் கிரீடம் அல்ல தலையில் கூடும் கணம்
வெற்றி என்பது முற்றுப்புள்ளி தோல்வி வெற்றியின் முதல்புள்ளி
தோல்விகளை நேசி வெற்றிகளை வென்றுவிடலாம்
தோல்வியின் ருசி அறிந்தவன் மேதை
வெற்றியின் ருசியை மட்டுமே அறிய துதிப்பவனுக்கு வெற்றி வெறும் போதை
தோல்வின்பொழுது அமைதியை இரு வெற்றியின்பொழுது மௌனமாய் இரு
தோல்வியின் ப
ஆடைகளின் இடைவெளியும் நமக்குள் இடையுறாக தோன்றுகிறது வா ஆதாம் ஏவாள் காலத்திற்கும் முன் சென்றுவிடுவோம்
உன் இளமை மேடுகளில் என் இளமை வளைந்து நெளிந்து சென்று என் முதுற்சியை தேடுடடி
காதல் கற்று தந்த காமத்தை உன் ஈர இதழ்களில் தேர்வு எழுதித துடிக்குதடி என் இதழ்கள்
உன் கண்ணகுழியில் விடைக்கிறேன் நம் காதலை விலையட்டும் சிரிப்புகள் உன் இதழ்களில்
பூவின் மேலே
உன் பாதம்....
பாவம்
தொலைந்தது
என்று...
புலம்பின
பூக்கள்....!!
உன் கால்களைக்
கட்டிக்கொண்ட
கொலுசுகள்....
கவனித்தன.....
காயம் இல்லாத
கொலுசு ஓசை
கேட்டு.....!!
உன் கால்களைக்
கட்டிப்பிடித்து
கொலுசுகள்
அழுதன....தொலைத்துவிடாதே
எங்களை
என்று....!!
உன் காதல்
தரும்
மயக்கம்.....உனைக்
காணாத
போது....வரும்
கலக்கம்....இப்படி
என்
வாழ்க்கை....
உன்னைத் தேடி
உனக்காகவே........
என் வாழ்க்கையில்
காலங்கள்
பாதி.....வாசற்படியில்
தொலைந்தன.....!
வந்தாயா....?
வருவாயா...?
என்கிற வினாக்களோடு
விடிகின்ற
காலை.....விடியாத
பொழுதாக
என்னோடு அழிந்து
போகிறது.....!!
விடை தெரியாத
வாழ்க்கையை
வாழ்கிற என்னிடமே....
வந்து விழுகின்றன
இன்னும் பல
வினாக்கள்.....!!
கோபங்கள் தரும்
சோகம்....நிலை
இல்லை என்று
எண்ணியது ஒரு
காலம்....இனி
ஒருபோதும்
நேசிக்கும் நிலையில்
நானும்
இல்லை....நானே
இல்லையென்றான
பிறகு.....!
காதலோடு வாழ்வதும்
காதலுக்காகவே
வாழ்வதும்
எல்லோருக்கும்
கிடைக்காத
ஒரு வரம்.....என்றெண்ணி
வாழ்வோமே
மூச்சு அடங்கும்
வரை.....!!
இரவும் பகலும்
இணைந்தே இருக்கின்றது உன்
விழிக்குள் கறுப்பு வெள்ளையாய்
பாவம் என்னைப் போல் இன்னும் எத்தனை உயிர்கள்
பலியாக போகின்றனவோ
***************************
கொடிய விஷம் யாதெனில்
உன் கன்னத்து குழிகளே
தினமும் தான் பிணமாகிறேன்.
****************************
நீ பிரம்மனின் மகளாய் தான் இருக்கக்கூடும்
என்னையும் மாற்றிவிட்டாய் படைப்பாளியாய்.
**********************
முற்றத்து மல்லிகையோ
தோட்டத்து மல்லிகையோ
தோற்றுத்தான் போகிறது
உன் சோம்பல் முறிப்பின் முன்
****************************
நானும் திருநங்கை தான்
உன் ஆடைகள் அணிந்து உறங்குகிறேனே.!
****************************
என்ன
இரவும் பகலும்
இணைந்தே இருக்கின்றது உன்
விழிக்குள் கறுப்பு வெள்ளையாய்
பாவம் என்னைப் போல் இன்னும் எத்தனை உயிர்கள்
பலியாக போகின்றனவோ
***************************
கொடிய விஷம் யாதெனில்
உன் கன்னத்து குழிகளே
தினமும் தான் பிணமாகிறேன்.
****************************
நீ பிரம்மனின் மகளாய் தான் இருக்கக்கூடும்
என்னையும் மாற்றிவிட்டாய் படைப்பாளியாய்.
**********************
முற்றத்து மல்லிகையோ
தோட்டத்து மல்லிகையோ
தோற்றுத்தான் போகிறது
உன் சோம்பல் முறிப்பின் முன்
****************************
நானும் திருநங்கை தான்
உன் ஆடைகள் அணிந்து உறங்குகிறேனே.!
****************************
என்ன
காதல் இப்படியும் இருக்கலாம்
விழி நோக்கா
அவனின்
விழி நோக்க
இந்த கயல் விழி
இதயம்
வழி பார்க்க
நல்ல நேரம் பிறப்பதாய்
குடுகுடுப்பைக் காரனும்
நடக்குமா என்று
நினைக்கையில்
பல்லியும் அதன் பாஷையில்
ஆம் சொல்ல
திறந்த கண்களுக்குள்
கலர் கலர் கனவுகள்
வட்டமிட
தூரத்தே தெரிந்த
வானம் அருகில்
வந்து என்னையும்
அணைத்துக்கொள்ள
அந்த
நட்சத்திரக்கூட்டத்தில்
நானும்
மின்னப்போவதாய்
தோன்றிய எண்ணத்திற்கு
முற்றுப்புள்ளி
வைத்து அப்பாத்தா
சொன்னாள்
அந்த
கிருஷ்ணா பய வந்தா
வீட்டுள்ளுக்கு கூப்பிடாத
அவன் கீழ் ஜாதி.
குனிந்த தலை நிமிராது
இன்றும்
குப்பையை சுமந்து செல்கிறான்
அவன்.
நீளம் தாண்டும் போட்டியிலும் நான் வென்றுவிடுவேன்
ஆனால் உன் கன்னக்குழி தாண்டும் போராட்டத்தில் தோற்றுவிட்டேன்
உன் இதழ்களின் சுழலில் சிக்கி சுழண்டேன்
உன் அழகில் சரண் அடைந்தேன்
உன் விழிகளால் வீழ்த்தபட்டேன்
என்னை மறந்தேன் அதில்
உன்னை நிறைத்தேன்
உன் நினைவில் மூழ்கி தவித்தேன்
நம் காதலில் சிக்கி சிதைந்தேன்
வெட்கத்தை வீசி காயங்கள் தருகிறாய்
காரணங்கள் இன்றி கோவமும் கொள்கிறாய்
அடிக்கவும் செய்கிறாய் அடித்தபின் அனைத்தும் கொள்கிறாய்
என இது நீ நல்லவளா இல்லை கெட்டவளா என்று நான் கேட்க
சீ போ..... என்று சிணுங்கி கொள்கிறாய்
கடற்கரையில் கடல் அலைகள் உன் கால் உரச கோவம் கொண்டேன்
நான் தளர்ந்து நிற்கும் வேளையில் எனக்கு தோல் கொடுத்த தோழன் அவன்
நான் துணிந்து நிற்கும் வேளையில் என்னுடன் நிற்கும் என் தன்னம்பிக்கை அவன்
நான் யோசனையில் முழுகிதும் வேளையில் என் பினால் நிற்கும் பொதி மரம் அவன்
நான் தவறுகள் செய்கையில் என்னை திருத்திட என் முன் நிற்கும் ஆசான் அவன்
தன்னை உறுக்கி என்னை படைத்த பிரமன் அவன்
வருடங்கள் பல கடந்தும் என்னை அவனுடன் சுமந்து செல்லும் தாய் அவன்
சொல்லி முடிக்க இயலாத கவிதை அவன்
தொழுது முடிக்க இயலாத தெய்வம் அவன்
என்னை உருவாகிய உயிரன்னு அவன்
அவன் உழைப்பில் என்னை உயர்த்திய உழைப்பாளி அவன்
அவன் அனுபவத்தை முன் நிறுத்தி என்னை வழிநடத்தும் என் தலைவன் அவன
கருவிழி கலங்கி கண்ணீர் வருகிறதே
உன்னுள் ஏனோ நிலவொளி தெரிகிறதே
என்னுள் வளரும் ஒரு காதல் ..அது
விண்ணில் கரையும் ஒரு நிலவா ?...
கண்ணில் ஏனோ உறக்கமில்லை
விடிந்த பின்னும் வெளிச்சமில்லை
வலியில் விழியும் கரைகிறதே
கரைந்தும் இதயம் கனக்கிறதே
கருவறை பாசம் மறந்திடுமோ ?
கல்லறை நோக்கி ஊர்வலமோ ?
களிப்பில் வாழ்ந்த களி முகமோ
காய்ந்த சருகாய் நகர்வலமோ ?
சாபம் செய்த ஒரு சதியா?..
சாகும் வரையும் தலை விதியா ?
விதியென்று நினைத்து வாழ்வேனோ
விரக்தியில் வீழ்ந்து போவேனோ
விழிகள் மூட மறுக்கிறதே
வியர்த்து வலியில் துடிக்கிறதே
துடிக்கும் இதயம் தூங்கிடுமோ?
துணிந்தே உயிரும் துறந்திடுமோ
அப்பன் விட்டுச் சென்றாலும்
அகிலம் பெரிது வாழந்திடலாம்,
தப்பென யாரையும் சொல்லவேண்டாம்
தங்கமே உனைநான் வாழவைப்பேன்,
எப்பவும் நல்வழி நடந்திடுவாய்
ஏழைகள் நமைப்போல் பலருண்டு,
குப்பையில் கிடைத்த வைரம்நீ
கோபுரம் ஏற்றுவேன் தாய்நானே…!
என்னவளே உன் கடைக்கண் பார்வை தந்துவிட்டு போன
ஆயிரம் அர்த்தங்களில் ஒன்றை கூட
விளக்கவும் முடியவில்லை விலக்கிகொள்ளவும் முடியவில்லை...........