வாசல் வரை

என் வாழ்க்கையில்
காலங்கள்
பாதி.....வாசற்படியில்
தொலைந்தன.....!

வந்தாயா....?
வருவாயா...?
என்கிற வினாக்களோடு
விடிகின்ற
காலை.....விடியாத
பொழுதாக
என்னோடு அழிந்து
போகிறது.....!!

விடை தெரியாத
வாழ்க்கையை
வாழ்கிற என்னிடமே....
வந்து விழுகின்றன
இன்னும் பல
வினாக்கள்.....!!

கோபங்கள் தரும்
சோகம்....நிலை
இல்லை என்று
எண்ணியது ஒரு
காலம்....இனி
ஒருபோதும்
நேசிக்கும் நிலையில்
நானும்
இல்லை....நானே
இல்லையென்றான
பிறகு.....!

காதலோடு வாழ்வதும்
காதலுக்காகவே
வாழ்வதும்
எல்லோருக்கும்
கிடைக்காத
ஒரு வரம்.....என்றெண்ணி
வாழ்வோமே
மூச்சு அடங்கும்
வரை.....!!

எழுதியவர் : தம்பு (29-May-16, 2:58 pm)
Tanglish : vaasal varai
பார்வை : 131

மேலே