தாயின் சபதம்…

அப்பன் விட்டுச் சென்றாலும்
அகிலம் பெரிது வாழந்திடலாம்,
தப்பென யாரையும் சொல்லவேண்டாம்
தங்கமே உனைநான் வாழவைப்பேன்,
எப்பவும் நல்வழி நடந்திடுவாய்
ஏழைகள் நமைப்போல் பலருண்டு,
குப்பையில் கிடைத்த வைரம்நீ
கோபுரம் ஏற்றுவேன் தாய்நானே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-May-16, 6:05 pm)
பார்வை : 64

மேலே