மீண்டும்

எனக்கு நீதான் மூச்சு
விட்டதால் பறந்தது போச்சு

இப்படி எத்தனை மூச்சு?
இழுக்கையில் என்னுடன்
வருகிறது

உதட்டோரம் சற்று
வழுக்கையில் விண்ணோடி
போகிறது!!

மூச்சுக்கு முகவரியில்லை
தேடித் திரிந்ததை இழுத்துக்கொள்ள
எனக்கது தேவையும் இல்லை

திரும்பிய இடங்களில் அதை
இழுத்துக் கொள்வேன்...

இருந்தாலும்...

எனக்கு நீதான் மூச்சு!!

எழுதியவர் : இலக்கியன் அகல்யன் (4-May-16, 6:03 pm)
Tanglish : meendum
பார்வை : 144

மேலே