இலக்கியன் S - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இலக்கியன் S |
இடம் | : PATHUTHAKKU |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 116 |
புள்ளி | : 12 |
வீதிகளில் விளக்கேற்றி
வைத்துக் கொண்டே
நடக்கிறார்களாம்
நிழலில் அவர்களது
நிர்வாணம் கூட எனக்கு
தெரியவில்லை
நாய்களும் நரிகளும்
வாழ்க்கைப் பெற்று-நடுத்
தெருவில் குரைத்துக்
கொண்டிருக்கிறது
நாங்கள்
எச்சில் தின்றா பழகினோம்?
மிச்சம் தருகிறோம்
பிழைத்துக் கொள்ளுங்கள்..
-இலக்கியன் அகல்யன்
விரித்து வைத்த மணற்
படுக்கைகள் அழகாய்
உழவுக்கு நெளிந்து கொடுக்கிறது
வலியை கூட அவன்
வறுமைக்காக பொறுத்து
ஏளனம் எதற்கோ?? வான் கூட
கை கொட்டி சிரிக்க மறுக்கிறது
சோற்றுக்கு முலைபாலும்
கறக்க வலிக்கிறது
தேசத்தில் வீசும் காற்றும்
அவன் வியர்வையில்
வடியும் இரத்தத்தை என்றும்
துடைக்க போவதில்லை
உச்சிவெயில் நிழழுக்கு
மண்ணில் முளைத்த
கூரை கருவறையில்
ஒரு நிமிடம் பதுங்கி
தத்துப் பிள்ளையாகி விடுகிறான்
உணவை வளர்த்து
தாயாகிவிட்ட அவன்
வீடுகள் வழியிழந்து
வீதி வரையில் நகர்கிறது
பட்ட கடன்கள் எல்லாம்
வாசலில் கரைந்து அழுகையில்
சூறையாடப்பட்ட உடைமையை
விதையாக இழந்து
மணலில் இருந்த
விரித்து வைத்த மணற்
படுக்கைகள் அழகாய்
உழவுக்கு நெளிந்து கொடுக்கிறது
வலியை கூட அவன்
வறுமைக்காக பொறுத்து
ஏளனம் எதற்கோ?? வான் கூட
கை கொட்டி சிரிக்க மறுக்கிறது
சோற்றுக்கு முலைபாலும்
கறக்க வலிக்கிறது
தேசத்தில் வீசும் காற்றும்
அவன் வியர்வையில்
வடியும் இரத்தத்தை என்றும்
துடைக்க போவதில்லை
உச்சிவெயில் நிழழுக்கு
மண்ணில் முளைத்த
கூரை கருவறையில்
ஒரு நிமிடம் பதுங்கி
தத்துப் பிள்ளையாகி விடுகிறான்
உணவை வளர்த்து
தாயாகிவிட்ட அவன்
வீடுகள் வழியிழந்து
வீதி வரையில் நகர்கிறது
பட்ட கடன்கள் எல்லாம்
வாசலில் கரைந்து அழுகையில்
சூறையாடப்பட்ட உடைமையை
விதையாக இழந்து
மணலில் இருந்த
மரண படுக்கையில்
புல்லுக்கட்ட தூக்கிக்கிட்டு
புள்ளைகள அள்ளிகிட்டு
சல்லிக்கட்ட பூட்டிக்கிட்டு
சந்தைவழி போகயில
கரிசகாட்டு ஓரத்துல
கள்ளிச் செடி குத்திடுச்சே
விரிசல் விட்ட வயல்காடு
வாய்காஞ்ச வரப்பினிலே
வெள்ளம் வந்து பாய்கயிலே
காக்கை வந்து கத்துதிங்கே
கரையான் வந்து ஊறுதிங்கே
பொட்டல் காட்டு புழுதியில
புல்லு பூச்சி மொளைக்கயில
கரட்டுக்காட்டு மனுசன் மக்கா
கோமனத்த கட்டிகிட்ட கோவன்
மகன் நடக்குறானே வயல்ல
நாத்த பாவி அறுக்குறானே
நாய்க்கும் சோத்த ஊத்துறானே,
சொரனை கெட்ட சாதி சனம்
சொல்லாமலே போகு திங்கே
எள்ளாமலே வாழுதிங்கே
பூவோடு சேர்ந்த வாசம்
புல்லாங்குழலோடு உரசி வீசும்
நாரோடு பூவெடுத்து
நறுமலரை நீ தொடுத்தால்
நகங்கள் பட்டதெல்லாம் கூசும்
தென்றலோடு தெவிட்டிய சுகராகம்
மௌன மொழிகளாய்
என்னிடத்தில் பேசும்
நிலவொளியை இரவல் வாங்கி
நெற்றி பொட்டாய் சுமக்க வேண்டும்
நெஞ்சோரமாய் சாய்ந்து தினம்
நீலவானய் இரசிக்க வேண்டும்
கண்ணோரம் பார்க்கையிலே கவி
மொழிகளில் பேசிட வேண்டும்
சிறகடிக்கும் கொழுசொலிகள்
சில்லென்று காதோரம்
சிரிப்பூக்களில்
மொய்க்க வேண்டும்
சிலிர்த்தெழுந்த மயிர் நுனிகள்
சிறிதேனும் உறங்க வேண்டும்
செவ்வானம் கருக்களிலே
செம்பருத்தி பூ இதழில்
மல்லிகை பூ மலர்தல் வேண்டும்.
பெண்தாயே பிறந்தாயே
வாழும் பிணத்தை தாங்கி
வளர்த் ததாயே
மண்தின்றே இரையாவோம்
வாழுங் காலத்தை தாங்கும்
சுமை ஆவோம்
தும்பிபோல் திரிந்தவளை
மா வாய்வெம்பி போய்
கண்டேனடி மலடி
என்றபழிச் சொல்லாலே
விம்மல் வடித்து நூலானாள்
பற்றிஎரியுந் தீயானாள்
போதைசுகம் என்மேனியென
பூ வினமாய் வண்டாட குறை
என்றும் கண்டதில்லை
பிறப்புறுப்பால் ஆணென்போம்
பிறர் பொறுப்பால் பெண்னென்போம்
தனிமலடி இனமுண்டோ?
உளமலடாய் போனோர்கள்
விழி மலடை குருடனென்பார்
முடவனவனை ஊனனென்பார்
உறு தீயாய் சொல்கையிலே
ஒருத்திகூட மலடில்லை
உளமலடே ஏராளம்
தாராளமாய் மனமிருந்தால்
உலகம் பெற்ற பேறுகூட
தன்கிளை தானே
கல்லறையில் பூ
மரண படுக்கையில்
புல்லுக்கட்ட தூக்கிக்கிட்டு
புள்ளைகள அள்ளிகிட்டு
சல்லிக்கட்ட பூட்டிக்கிட்டு
சந்தைவழி போகயில
கரிசகாட்டு ஓரத்துல
கள்ளிச் செடி குத்திடுச்சே
விரிசல் விட்ட வயல்காடு
வாய்காஞ்ச வரப்பினிலே
வெள்ளம் வந்து பாய்கயிலே
காக்கை வந்து கத்துதிங்கே
கரையான் வந்து ஊறுதிங்கே
பொட்டல் காட்டு புழுதியில
புல்லு பூச்சி மொளைக்கயில
கரட்டுக்காட்டு மனுசன் மக்கா
கோமனத்த கட்டிகிட்ட கோவன்
மகன் நடக்குறானே வயல்ல
நாத்த பாவி அறுக்குறானே
நாய்க்கும் சோத்த ஊத்துறானே,
சொரனை கெட்ட சாதி சனம்
சொல்லாமலே போகு திங்கே
எள்ளாமலே வாழுதிங்கே