வானம் அந்திப் பொழுதினில் உன்னை வரைந்து கொண்டிருக்கிறது இளநரை...
வானம்
அந்திப் பொழுதினில்
உன்னை வரைந்து
கொண்டிருக்கிறது
இளநரை கூந்தல்
மின்னலாய் வெட்டுகிறது
உன்னிரு கண்களாய்
காற்றில் மேகங்கள்
களைந்து கிடக்கின்றது
கார்முகில்கள் நீர்முகிலை
தெளிக்கின்றன
சிலிர்ப்பில் சுடுதீக்கிரையான
சிட்டுக்குருவி படபடக்கிறது
சாரலில் நீ தெரிக்கிறாய்
மொட்டுகள் அவிழ்ந்து
முழு பௌர்னமியாய்
உலவுகின்றது
தென்றலில் கிளைகளாய்
என்னை அசைத்து
உன் மௌனம் மட்டும்
பூத்து உதிர்கின்றது.
-இலக்கியன் அகல்யன்.