எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீதான் இந்த உலகத்தின் ஒவ்வொரு அனுவின் மாபெரும் ரசிகன்...

நீதான் இந்த உலகத்தின்
ஒவ்வொரு அனுவின்
மாபெரும் ரசிகன்
பாக்கியசாலி நாங்கள்
உன்னை பெற்றதால்
நீ பராக்கிரமசாலி

கருப்பு வெள்ளை கட்டையின்
மீது உதிர்ந்த பூவெல்லாம்
காதலியின் தலையில்
மலர்கிறது

கனவு தேசத்தின் கை
குழந்தைகளாவோம்
நீ தாலாட்டும் போது
உன் தோள்மீது நாங்கள்
நீ இன்றி உறங்காது ஓர் இரவும்

ஓடியும் தேயவில்லை
உன் இசையில் சக்கரம்
மகிழும் உந்து உன்னாலே
நகர்கின்றன நடுஇரவில்

மௌனத்தின் வலியில்
நடுவயதுக்காரியின்
மருத்துவன் நீ
என்ன மகத்துவம் 
செய்தாளோ உனதன்னை

மெட்டியொலி காதோரம்
மிளிர்கின்றது உன்குரலில்
செவிக்கு சுவை நரம்புகளை
நீ துளிர்க்க செய்தவன்
வீனைகள் அரும்பாய்
விருந்து வைக்கயில்

பட்டத்தையும் வென்று
பட்டறிவையும் வென்று
இருக்கிறாய்
களைப்பு உன்னிசை சாரலில்
களை பூவாய் உதிரும்

மணக்கோலத்தில் சிறகுகள்
மேலெழுகின்ற
கனவு கவிதைகள் நீ சுண்டும்
விரலசைவுதான்

வானிலிருந்து பறவைகள்
சிறகை ஒவ்வொன்றாக
உதிர்த்து கொண்டுருக்கின்றன
உன் இசை குறிப்பை ஏந்திய
வண்ணம்


-இலக்கியன் அகல்யன்.

பதிவு : இலக்கியன் S
நாள் : 31-May-16, 7:12 am

மேலே