எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் பார்வையில் நீல வானம் நீண்டு பரந்து கிடக்கின்றன...

உன் பார்வையில் 
நீல வானம் நீண்டு பரந்து
கிடக்கின்றன

பால்வெளியில்
நீ மட்டும்தான்
நின்று கொண்டிருக்கிறாய்

மலையருவி சிதறலில்
உடைந்திடாது மேகங்கள்
மூடி வைக்கின்றன
ஒளிமஞ்சள் நிலவை

திரையை விலக்கியதும்
சிறகுகள் அசைகின்றது
செம்பருத்தி பூவொன்று
நனைந்து மிதக்கிறது

நீ நிலவை பார்த்துக்
கொண்டிருக்கிறாய்
உன்னை நிலாவென
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


-இலக்கியன் அகல்யன்.

பதிவு : இலக்கியன் S
நாள் : 31-May-16, 7:08 am

மேலே