சாயம் பூசு

வீதிகளில் விளக்கேற்றி
வைத்துக் கொண்டே
நடக்கிறார்களாம்

நிழலில் அவர்களது
நிர்வாணம் கூட எனக்கு
தெரியவில்லை

நாய்களும் நரிகளும்
வாழ்க்கைப் பெற்று-நடுத்
தெருவில் குரைத்துக்
கொண்டிருக்கிறது

நாங்கள்
எச்சில் தின்றா பழகினோம்?

மிச்சம் தருகிறோம்
பிழைத்துக் கொள்ளுங்கள்..


-இலக்கியன் அகல்யன்

எழுதியவர் : இலக்கியன் அகல்யன் (5-May-16, 2:03 pm)
பார்வை : 84

மேலே