பூவிதழ்
பூவோடு சேர்ந்த வாசம்
புல்லாங்குழலோடு உரசி வீசும்
நாரோடு பூவெடுத்து
நறுமலரை நீ தொடுத்தால்
நகங்கள் பட்டதெல்லாம் கூசும்
தென்றலோடு தெவிட்டிய சுகராகம்
மௌன மொழிகளாய்
என்னிடத்தில் பேசும்
நிலவொளியை இரவல் வாங்கி
நெற்றி பொட்டாய் சுமக்க வேண்டும்
நெஞ்சோரமாய் சாய்ந்து தினம்
நீலவானய் இரசிக்க வேண்டும்
கண்ணோரம் பார்க்கையிலே கவி
மொழிகளில் பேசிட வேண்டும்
சிறகடிக்கும் கொழுசொலிகள்
சில்லென்று காதோரம்
சிரிப்பூக்களில்
மொய்க்க வேண்டும்
சிலிர்த்தெழுந்த மயிர் நுனிகள்
சிறிதேனும் உறங்க வேண்டும்
செவ்வானம் கருக்களிலே
செம்பருத்தி பூ இதழில்
மல்லிகை பூ மலர்தல் வேண்டும்.