கருத்தில் பூத்த கவிதை

மலர்த்தோட்டத் தில்பட்டாம் பூச்சிதேன் உண்ணும்
மலர்பார்த் துசிரித் திடும்
---குறள் வெண்பா

மலர்த்தோட்டத் தில்பட்டாம் பூச்சிதேன் உண்ணும்
மலர்பார்த் துசிரிக்கும் தேனுறுஞ்சும் கள்வா
மலர்த்தோட்டத் தில்காவ லுண்டறி யாயோ
மலர்க்கா தலாநீயு மே

---இன்னிசை வெண்பா
----கவின் சாரலன்
உங்கள் மலர்த் தோட்டத்தில் நான் திருடித் தேன் உண்ணும் பட்டாம் பூச்சி என்ற
முகமது சர்பானின் அழகிய கருத்தில் பூத்த இரு பாக்கள் .
யாப்பார்வலர்கள் முயலலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Apr-16, 10:21 am)
பார்வை : 128

மேலே