புதியதோர் உலகம் செய்வோம்
மரம் எங்கே எங்கே
நிழல் எங்கே எங்கே
தேடித் தேடி அலைந்தானே.
மனிதா ஓ மனிதா
மனிதா மாமனிதா யாவும்
நீ செய்த வினையென்று அறியாமலே.
மரம் எங்கே எங்கே
நிழல் எங்கே எங்கே..
ஒருநிமிடம் நில் நில்
அடுக்குமாடி வீடுக் குவித்து
இயற்கை வளத்தை அழித்தவன் நீதானே..
ஒருநிமிடம் நில் நில்
நான் கேட்பதிற்கு பதில் சொல் சொல்.
எங்கே நீ செல்கிறாய்
ஏன் நிற்காமல் செல்கிறாய்
அடுத்த கிரகத்தை அழிக்க
தீவிர செயல் திட்டமா..
எங்கே நீ செல்கிறாய்
ஏன் நிற்காமல் செல்கிறாய்
மரம் எங்கே எங்கே
நிழல் எங்கே எங்கே..
எந்திரவியலுக்கு உட்பட்டு
பூமியை பிளந்தவன் நீதானே...
நீர் வளம் அழித்து
கையேந்த வைத்தவன் நீதானே.
நான் கேட்பதிற்கு பதில் சொல் சொல்..
கிராமத்தில் வாழ்ந்தவரை
நான் கண்டதில்லை மகிழ்ச்சியின்மை..
நீ செய்த காரியத்தால்
தினம் தினம் தீக்குளிக்கிறேன்
நான் தினம் தினம் தீக்குளிக்கிறேன்..
பிளாஸ்டிக் செய்தாய் செய்தாய்
மளிவு விளையில் விற்றாய்
ஏன் விற்கிறாயென்று தெரியவில்லை
இன்று தான் தெரிந்தது
அதற்குள்ளே நாடு அழிந்தது.
ஓ மனிதா மனிதா
சொல்வாயா இல்லையா
நான் கேட்பதிற்கு பதில் சொல் சொல்.
நீ செய்த காரியத்தால்
ஓர் இனமே அழிந்தது..
மெல்ல மெல்ல இயற்கை
சீற்றத்தால் சிதைந்தது...
அடுத்த தலைமுறையாவது
வாழ வழிச் செய்
மனிதா மனிதா நான்
கெஞ்சிக் கேட்கிறேன்
அடுத்த தலைமுறையாவது
இன்பமுடன் வாழ வழி செய்..
புதியதோர் உலகம் படைப்போம்
வா......................வா.
இயற்கை விதையை ஒவ்வொன்றாய்
தூவித் தூவி அலங்கரிப்போம் வா வா.
மரம் எங்கே எங்கே
நிழல் எங்கே எங்கே
நாங்கள் அமைக்கும் புதுஉலகத்தில்
பூத்துக்குளுங்கும் இனி அங்கே அங்கே..
-செந்தமிழ் நாகராஜ்