செந்தமிழ் நாகராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : செந்தமிழ் நாகராஜ் |
இடம் | : வேலூர் மாவட்டம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 92 |
புள்ளி | : 14 |
எனது பாதையை நானே சித்தரித்து
எனது வாழ்வை நானே நகர்த்துபவன் ......
-செந்தமிழ் நாகராஜ்
மாமிச வாய்கள்
---------------------------
மாமிச சதைகளை
தின்ன வாய்களுக்கு
கனிகளும் , காய்களும்
ருசி தணிக்கவில்லை...
பற்களின் இடுக்குளில்
சிக்கும் மாமிச சதைக்காக
இளஞ்செடியின் வேர்
பல்குச்சியாக மாற்றப்படுகிறது...
அன்று ஒழுகிய எச்சிலை
ஈடுசெய்ய மாமிச வாய்கள்
இன்று குறுதியை
ஒழுக விடுகிறது...
இதுவரை இருளில்
மறைக்கப்பட்டிருந்த நிழல்
இன்று இரவு வந்ததும்
பல உருவங்களாக
நிழற்படமாகிறது...
செய்தித்தாள்களில்
இருந்த மின்மினிகளைகூட
மாமிச பட்டியலில்
சேர்த்துக்கொண்டு
உருவக்காகிதங்களையும்
மாமிச வாய்கள்
மென்று விழுங்குகிறது...
நவீன உலகத்தில்
மாமிச வாய்களின்
ருசிக்கேற்ப தின்பண்டங்கள்
பார்க்கும் இடமெல்லாம
உள்ளத்தில் அன்பிருந்து ஊதியம் இல்லையானால்
காதல் கிடைத்தாலும் கசப்பு..
புசிப்பதைக் காதல் புசித்தப்பின் கையசைத்தால்
சாதலே எங்கும் மருந்து..
இழுக்க இழுக்க அழுக்கு சேர்ந்தப்பின்
மண்ணிற்குச் சொந்தம் உயிர்..
உடைந்து போனேன்..
நொறுங்கி போனேன்..
கண்கள் கலங்காமல்
ஈரமாவது ஏன் ?...
நெருங்க முயன்றேன்
விலகி சென்றாய்...
விலக முயன்றேன்
என்மனதை காணவில்லை...
குயிலுக்கோ சுதி தெரியாது
எனக்கோ மதி கிடையாது..
வாங்கிய வடுவே ஆறவில்லை
இருப்பினும் மோகம் தீரவில்லை..
உடைந்து போனேன்
என்னுள் பலபிம்பம்...
சேர்க்க முயன்றேன்
அதிலோ உன்பிம்பம்...
தீராதா ?. என் ஆசை தீராதா ?.
காகித கப்பல் கரை ஏறாதா ?.
வீதியில் சந்தித்த நம் மனது
ஒன்றுடன் ஒன்று சேராதா ? ..
உடைந்து போனேன்
நொறுங்கி போனேன்
பெண்ணே உன்னாலே
எல்லாம் உன்னாலே....
-செந்தமிழ் நாகராஜ்
ஒரு தகப்பன் தன் மகனுக்கு கொடுக்கும் சிறந்த சொத்து என்ன. ? ஏட்டு கல்வியா.? அனுபவா.? பணமா.? இந்த மூன்றில் ஏதாவது ஒன்று தான் நீங்கள் தங்களது தந்தையின் மூலமாக பெறமுடியும் என்றால் எதை தேர்ந்தெடுப்பீர்கள் ...? காரணம் என்ன. .? ஒரு முக்கியமான குறிப்பு உங்கள் தந்தையிடம் இந்த மூன்றில் ஒன்றை மட்டுமே உங்களால் பெறமுடியும். நீங்கள் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருந்தாலும் சரி. (அவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டால் )
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு தரும் ஆதரவு மற்ற விளையாட்டுகளுக்கும் உள்ளதா?
ஏழு நிறத்து வானவில்லு
வண்ணம் இழந்து போகுமோ..
காதலெனும் சொல்லுக்குள்ள
எல்லா வண்ணமும் மீளுமோ..
அவள நினைக்கையில
தேன் சொட்டு நாவில் ஊருது..
இடைவிடும் கண் சிமிட்டலாலே
என்கர்வமோ காணாப் போகுது..
தமிழ் பயிலும் காரணத்தால்
காதலிப்பதில் அழகு கூடியதா..
ஒட்டுமொத்த என் உயிர்மெய்யில்
உன் மெய்யும் சேர்ந்ததா...
காதலை சொல்லாமலே
அனுஅணுவாய் ரசிக்கிறேன்..
சொல்ல வரும் நேரம் காதலின்
முடிவை எண்ணி திகைக்கிறேன்..
மாயவளே என்னை மயக்கி
விளையாடியதுப் போதும்..
இனி என்னை மயக்கி விளையாட
என்னிடம் இல்லையே ஏதும்...
-செந்தமிழ் நாகராஜ்