மாமிச வாய்கள்
மாமிச வாய்கள்
---------------------------
மாமிச சதைகளை
தின்ன வாய்களுக்கு
கனிகளும் , காய்களும்
ருசி தணிக்கவில்லை...
பற்களின் இடுக்குளில்
சிக்கும் மாமிச சதைக்காக
இளஞ்செடியின் வேர்
பல்குச்சியாக மாற்றப்படுகிறது...
அன்று ஒழுகிய எச்சிலை
ஈடுசெய்ய மாமிச வாய்கள்
இன்று குறுதியை
ஒழுக விடுகிறது...
இதுவரை இருளில்
மறைக்கப்பட்டிருந்த நிழல்
இன்று இரவு வந்ததும்
பல உருவங்களாக
நிழற்படமாகிறது...
செய்தித்தாள்களில்
இருந்த மின்மினிகளைகூட
மாமிச பட்டியலில்
சேர்த்துக்கொண்டு
உருவக்காகிதங்களையும்
மாமிச வாய்கள்
மென்று விழுங்குகிறது...
நவீன உலகத்தில்
மாமிச வாய்களின்
ருசிக்கேற்ப தின்பண்டங்கள்
பார்க்கும் இடமெல்லாம்
கண்கவர்கிறது..
காலத்தின் மாறுதலால்
மாறிக்கொண்டே இருக்கும்
தின்பண்டகளுள்
தாயின் துளைகளும்
ஒருநாள் ருசிப்பார்க்கப்படும்...
-என்றும் எழுத்தாணி முனையில்
செந்தமிழ் நாகராஜ்