பெண்ணே உன்னாலே எல்லாம் உன்னாலே
உடைந்து போனேன்..
நொறுங்கி போனேன்..
கண்கள் கலங்காமல்
ஈரமாவது ஏன் ?...
நெருங்க முயன்றேன்
விலகி சென்றாய்...
விலக முயன்றேன்
என்மனதை காணவில்லை...
குயிலுக்கோ சுதி தெரியாது
எனக்கோ மதி கிடையாது..
வாங்கிய வடுவே ஆறவில்லை
இருப்பினும் மோகம் தீரவில்லை..
உடைந்து போனேன்
என்னுள் பலபிம்பம்...
சேர்க்க முயன்றேன்
அதிலோ உன்பிம்பம்...
தீராதா ?. என் ஆசை தீராதா ?.
காகித கப்பல் கரை ஏறாதா ?.
வீதியில் சந்தித்த நம் மனது
ஒன்றுடன் ஒன்று சேராதா ? ..
உடைந்து போனேன்
நொறுங்கி போனேன்
பெண்ணே உன்னாலே
எல்லாம் உன்னாலே....
-செந்தமிழ் நாகராஜ்