குழந்தைகள் கல்லறையில்

பெண்தாயே பிறந்தாயே
வாழும் பிணத்தை தாங்கி
வளர்த் ததாயே

மண்தின்றே இரையாவோம்
வாழுங் காலத்தை தாங்கும்
சுமை ஆவோம்

தும்பிபோல் திரிந்தவளை
மா வாய்வெம்பி போய்
கண்டேனடி மலடி

என்றபழிச் சொல்லாலே
விம்மல் வடித்து நூலானாள்
பற்றிஎரியுந் தீயானாள்

போதைசுகம் என்மேனியென
பூ வினமாய் வண்டாட குறை
என்றும் கண்டதில்லை

பிறப்புறுப்பால் ஆணென்போம்
பிறர் பொறுப்பால் பெண்னென்போம்
தனிமலடி இனமுண்டோ?

உளமலடாய் போனோர்கள்
விழி மலடை குருடனென்பார்
முடவனவனை ஊனனென்பார்

உறு தீயாய் சொல்கையிலே
ஒருத்திகூட மலடில்லை
உளமலடே ஏராளம்

தாராளமாய் மனமிருந்தால்
உலகம் பெற்ற பேறுகூட
தன்கிளை தானே

கல்லறையில் பூச்சொரிந்தால்
புழு புழுத்த உன்னுடலில்
புதைந்து எழும்

விதைகூட செடியாகும்
உன் மகனா(ளா)க மாரோடு
அனைத்தாற் போல்

செடிபூத்த புன்னகையில்
குலுங்கும் பூமாலை கூட
உன் பெயர்த்தி..!!

வாரிசு விளங்கியது.....!!!

எழுதியவர் : இலக்கியன் அகல்யன் (25-Apr-16, 7:16 pm)
பார்வை : 71

மேலே