உழைப்பே உயர்வு

உழைப்பே உயர்வு..
===================
உழைக்கும் கரங்களே..
உயர்வு பெறும்..
உழைப்பவன் ஏழை அல்ல..
எவனோ கோழை..
அவன்தான் ஏழை..
வாழையடி வாழையாக நமை..
வாழ வைப்பது உழைப்பே..
உழைப்பாளிகளின்..
களைப்பில் தான் நாம்..
பிழைக்கிறோம்..
நன்றே தழைக்கின்றோம்..
நமக்கேதும் களைப்பின்றி..
உதிரத்தை..
வியர்வைத் துளியாய் சிந்தியவன்..
ஒரு போதும்..
தோல்வியைச் சந்திப்பதிலை..
அவன்தான் என்றுமே..
வெற்றியை சுற்றி வருவான்..
ஆகவே..
பாட்டாளிகளாம்..
நம் கூட்டாளிகளை..
எழிலூட்டி பாராட்டுவோம்..
தொழிலாளர் தினத்தினிலே..
வசை பாடாது..
விசை கொடுப்போம்..
அச்சத்தை விட..
உச்சத்தை தொட..
வாழ்வு வளம்பெற..
_________________________________________
கவிதை ஆக்கம்:
கலாரசிகை நிலாமகள்,
பாத்திமா றிப்னா பிந்த் செயினுல்லாப்தீன்,
ஒலுவில்,
இலங்கை..